பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 141

அறிவோம்! தன்னைக் காதலனாகவும், இறைவனைக் காதலியாகவும் பாவனை பண்ணும் துணிச்சல் நமது தேசியக் கவியான பாரதி ஒருவனுக்கே இருந்திருக்கிறது. ஆம், பாடினானே, கண்ணம்மா என் காதலி - என்று.

சரி, பக்திக் காதல், மதுர பக்தி, காமம் கடிந்த காதல் - என்பதில் எல்லாம் உள்ளத்து உறவைத்தவிர, உடல் உறவுக்கு இடமேயில்லைதான். அத்தகைய பக்தியிலே, காமம் கடிந்த காதல் வாழ்விலே, திளைத்தவர்கள்தான் மணிவாசகரும், ஆண்டாளும். இந்த அற்புதமான வாழ்விலே தலைநின்றவர் யார் என்பதுதான் இன்று தீர்மானிக்க வேண்டிய விஷயம். இன்றைய விவாதத்தில் கலந்து கொண்ட அன்பர்களெல்லாம் இருவரது பாடல் களில் பலவற்றைத் தங்கள் தங்கள் கட்சிக்கு ஆதாரமாகக் கொண்டனர்.

கயல் மாண்ட கண்ணிதன் பங்கன்

எனைக் கலந்து ஆண்டலுமே அயல் மாண்டு, அருவினைச் சுற்றமும்

மாண்டு, அவனியின் மேல் மயல்மாண்டு, மற்றுள வாசகம்

மாண்டு, என்னுடைய செயல் மாண்டவா பாடித்

தெள்ளேனம் கொட்டோமோ

என்று பாடும் மணிவாசகர் பாட்டில் உடல் உறவைப் பற்றிப் பேச்சில்லையே என்பது மணிவாசகர் கட்சிக் காரர்கள் வாதம். மேலும், மணிவாசகர் பிறப்பாலே ஆண்மகன். தன்னை ஒரு பெண்ணாகபாவித்துக் கொண்டு தானே இறைவனோடு கலந்ததாக, காதல் கொண்டதாக, சொல்லுகிறார். இந்த உறவில் காமம் புகுவதற்கு வழியே