பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பட்டிமண்டபம்

இல்லையே என்பதும் அவர்கள் விவாதத்தில் முக்கிய மானது.

ஆண்டாள் கட்சி கொஞ்சம் பலவீனமானதுதான், அவள் பெண்ணாய்ப் பிறந்ததன் காரணமாக, என்பதை ஆண்டாள் கட்சியில் விவாதித்தவர்கள் ஒத்துக் கொண் டாலும், அவள் அரங்கனிடத்துக் கொண்ட காதல், காம வேட்கையால் அன்று, அழகை ரஸிக்கும் அழகுணர்ச்சி யின்பால்பட்டதே என்பது அவர்களது வாதம்,

எழில் உடைய அம்மனையீர்

என் அரங்கத்து இன்னமுதன் குழல் அழகர், வாய் அழகர்

கண் அழகர், கொப்பூழில் எழுகமலப்பூ அழகர்

எம்மானார் என்னுடைய கழல்வளையைத் தாமும்

கழல் வளையே ஆக்கினாரே -

என்று பாடும்பேது, தான் பெண் என்பதை மறவாது, தன் வளை கழன்றது என்று கூறுகின்றாளே ஒழிய, அரங் கனோடு உடல் உறவு கொள்ளும் வேட்கையே அவள் உள்ளத்தில் எழவில்லை. அவள் ஒரு சிறந்த ரஸிகை அரங் கனின் அழகை அனுபவிக்கிறாள். அந்த அழகனையேதன் காதலனாகக் கொள்கிறாள். ஏன், அவனும் அவளை ஏற்றுத் திருமணம் செய்து கொள்கிறான். இருவரது காமம் கடிந்த காதல் வாழ்வாகவே இருக்கிறது என்று ஆண்டாள் கட்சியினர் வாதம்.

இரண்டு கட்சிக்காரர்களுமே, தங்கள் தங்கள் கட்சியை மிக்க திறமையுடன் எடுத்து வாதாடி இருக்கின்றனர். மேலோட்டமாகச் சொல்லப் போனால், இருவருமே