பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 113

காமம் கடிந்த வாழ்விலே திளைத்தவர்கள் தாம், என்று எளிதாகச் சொல்லி விடலாம். என்னுடைய இக்கட்டான நிலை என்ன என்றால், இவர்களில் எவர் அத்தகைய வாழ்வில் தலை நின்றவர் என்று கூறி தீர்ப்புச் சொல்ல வேண்டியது. நாயக நாயகி பாவத்தில் பாடல்கள் பாடுவது என்பது, கூரிய கத்தி முனையில் நடப்பது போன்றது. இப்பக்கம் அப்பக்கம் விலகி விட்டால், விரசமாகிவிடும். செயிரின்றிப் பாடுவது மிக்க சிரமமான காரியம் என்று அமரர் வா.வெ.சு.அய்யர் எழுதுகிறார். அப்படிச் செயிரின்றிப் பாடுவது மாணிக்க வாசகர். ஆண்டாள், என்னும் இருவரில் யாருக்கு சாத்தியமான தாய் இருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் மட்டும் கூறினால் போதும்.

உடல் உறவைப் பற்றிச் சிறிதளவும் எண்ணாத மாணிக்கவாசகரும், திருவெம்பாவைப் பாடல் பாடும் போது ஒரு பாட்டுப்பாடுகிறார்.

உம் கையிற்பிள்ளை உனக்கே

அடைக்கலம் என்று அங்கு அப் பழஞ் சொல்புக்கும் எம் அச்சத்தால் எங்கள் பெருமாள் உனக்கு ஒன்று

உரைப்பேன் கேள், எம் கொங்கை

நின் அன்பர் அல்லாதார் தோள் சேரற்க

என்று கூறுவதால் சிவனடியாரைப் புணர்வதில் விருப்பம் உடையார் என்று ஒரு தொனி தொனிக்கும்படி பாடி விடுகிறார். இப்படிப் பாடியதைப் படித்தபின் தானோ என்னவோ, திருவாசகத்தைப் பற்றிப் பேசும் இராமலிங்க அடிகளும்,