பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பட்டிமண்டபம்

சேமமிகு திருவாதவூர்த்

தேவென்று உலகு புகழ் மாமணியே நீயுரைத்த

வாசகத்தை எண்ணுதொறும் காமமிகு காதலன் தன்

கலவிதனைக் கருதுகின்ற ஏமமுறு கற்புடையாள் -

இன்பினும் இன்பு எய்துவதே என்று பாடி விடுகிறார். காமமும் கலவியும் உடல் உறவினால் ஏற்படுவது. அந்நிலையில் மணிவாசகர் காமம் கடிந்த காதல் வாழ்வில் தலை நின்றார் என்று கூறுதல் சாத்தியமோ? * .

ஆண்டாள் இப்படியெல்லாம் பாடவில்லையோ? பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வது ஓர் ஆசையினால் என் - கொங்கை கிளர்ந்து குமைந்து குதூகலித்து

ஆவியை ஆகுலம் செய்யும் என்று பெண்மைக்கே உரிய வகையில் பரந்தாமரைப் புணரும் ஆசையினைப் பச்சையாகவே சொன்னாலும், பின்னால், -

ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கென்று

உன்னித்து எழுந்த என் தடமுலைகள் மானிடவர்க்கு என்று பேச்சுப்படில்

வாழகிலேன் கண்டாய் மன்மதனே என்று அனங்கனனுக்கே ஒரு சவால் விடுகின்றாளே. முன்னமேயே சொன்னபடி, மானிடரைத் தழுவும் ஆசையை அறவே வெறுக்கிறாள். கற்பனையில் உருவான,