பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் 447

திருவெம்பாவை விழாவிலே நடக்கிற பட்டிமன்றமானதி னாலே பொருத்தமாக இருக்கட்டுமே என்று அமைத் திருக்கலாம். மற்றபடி மாணிக்க வாசகருக்கும் ஆண்டா ளுக்குமிடையே ஏற்றத் தாழ்வு கற்பிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையவே கிடையாது. மாணிக்க வாசகரிடத்தில் நமக்கு எவ்வளவு பக்தி உண்டோ, அவ்வளவு பக்தி ஆண்டாளிடத்திலும் உண்டு. திருவெம் பாவையிலே எவ்வளவு ஈடுபாடு உண்டோ அவ்வளவு ஈடுபாடும் திருப்பாவையிலும் உண்டுதான். அதனால் தான் திருப்பாவை - திருவெம் பாவை விழா என்று சேர்த்தே கொண்டாடுகிறோம். ஆனால் மாணிக்கவாச கரும் சரி, ஆண்டாளும் சரி, ஆண்டவனை அடையக் கடைப்பிடித்த வழிகள் இருக்கின்றனவே அவை ஒன்றுக் கொன்று வேறுபடுகின்றன. அந்த வேறுபட்ட வழி களிலே எது எளிதானது, எது சிறந்தது என்று விவாதித்து முடிவு செய்யவே இந்தப் பட்டிமன்றம் கூடியிருக்கிறது.

அழுது அருள் பெற்றவர் மாணிக்கவாசகர். இறைவன் அருளைப் பெறுவதற்கு அகம் குழைந்து நெக்குருகி, அழுவதைவிட வேறு சிறந்த முறை இல்லை என்று எண்ணுகிறவர் மாணிக்கவாசகர். -

பாடவேண்டும் நான்

போற்றி நின்னையே பாடி நைந்து நைந்துருகி

நெக்கு நெக்கு ஆடவேண்டும் நான்

போற்றி அம்பலத்து ஆடு நின் கழல்

போது நாயினேன் கூடவேண்டும்.

என்று அகம் கனிந்து பாடுகின்றவர்.