பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பட்டிமண்டபம்

மேடையில் ஏற்றி, கட்சி பிரித்து விவாதிக்கச் செய்து இலக்கியத்தின் நயங்களை எல்லாம் வெளிப்படுத்தி எல்லோரையும் அனுபவிக்கச் செய்வதில் அவர்களுக்கு ஒரு தனி ஆர்வம். விழாக்கள் என்றால் கட்டாயம் பட்டி மண்டபம் இருக்க வேண்டும், அதற்குள்ள சுவையே வேறுதான். என்றும் சொல்வார்கள். கோவையில் அன்பர் பாபுராஜு ஏற்பாடு செய்யும் பட்டிமண்டபங்களுக்குரிய பொருள் விவாதத்துக்குரிய பொருள்தான் தருவதும் மாமாவின் வேலைதான். பொருள் தருவதோடு மட்டும் அமையாது, அந்தப் பட்டிமண்டபங்களுக்குத் தலைமை தாங்கி, வாதப் பிரதிவாதங்களைப் பொறுமையுடனும், ஆர்வத்துடனும் கேட்டு, நல்ல சுவையான தீர்ப்புகள் வழங்குவதிலும் வல்லவர்கள் அவர்கள். அவர்களுடைய தீர்ப்புகள் அவர்களுக்கே உரிய பாணியில் இருக்கும். கடைசி நிமிஷம் வரை யாருக்கு வெற்றி என்று இலகுவாகச் சொல்லிவிட முடியாதபடி அவ்வளவு சமத்காரமாக இருக்கும். எதிர்பாராதபோது, எதிர்பார்த்த தீர்ப்பைச் சொல்லி மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விடுவார்கள். சில சமயங்களில் எதிர்பாராத தீர்ப்பைச் சொல்லி சபையோரை வியப்பில் ஆழ்த்துவதும் உண்டு. காரைக்குடியில் சமீபகாலமாக நடந்துவரும் ஜனநாயகத் தீர்ப்பு - நோக்கர்கள் மூலம் கூறப்படும் தீர்ப்பு - அவர்களுக்கு உடன்பாடில்லாத ஒன்று. அந்த முறை பட்டிமண்டபத் தீர்ப்பின் வேகத்தையும் விறு விறுப்பையுமே குறைத்துக் கெடுத்து விடுகிறது என்பது அவர்களது எண்ணம். . -

கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக நானும் பட்டி மண்டப விவாதங்களில் பங்கெடுத்துக்கொண்டு வருகிறேன். என் துணைவியும் பங்கெடுத்துக் கொள்கிறாள். அவள் எனக்கு