பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பட்டிமண்டபம்

உற்றாரையான் வேண்டேன்

ஊர் வேண்டேன் பேர் வேண்டேன் கற்றாரையான் வேண்டேன்

கற்பனவும் இனி அமையும் குற்றாலத்தமர்ந்துறையும் கூத்தா

உன் குரை கழற்கே கற்றாவின் மனம் போலக்

கசிந்துருக வேண்டுவனே

என்று திருப்புலம்பலே பாடியிருக்கிறார். இதயம் கசிந்துருகும் போதுதான் கண்கள் கண்ணிரைச் சொரி கின்றன. அப்படிக் கண்ணிர் வெளிப்பட வெளிப்படத் தான் இதயத்திலுள்ள மாசெல்லாம் கரைந்து உள்ளம் தூய்மையடைகிறது. அப்படித்துய்மையடைந்து விட்டால் அதன்பின் இறைவனை அடைவது, அவன் அருளைப் பெறுவது எல்லாம் எளிது என்றும் எண்ணுகிறார்.

வீட்டிலே குழந்தைகள் ஒரு காரியத்தைச் சாதிக்க வேண்டுமென்று நினைத்தால் அதற்குப் பயன்படுத்துவது அழுகை தானே? அழுத பிள்ளைக்கு வாழைப் பழம்' என்பதுதானே பழமொழி. நாமோ இறைவனுடைய குழந்தைகள். அவன் அருளைப் பெறவேண்டுமானால் அழுது அதைச் சாதித்துக் கொள்வதில் தவறென்ன? நம்முடைய பிறப்பு பொய்யாக இருக்கலாம். ஆனால் நாம் அகம் குழைத்து அழுகின்றபோது அந்தக் குறை களெல்லாம்-கறைகளெல்லாம் கண்ணிரிலேயே கரைந்து விடுகின்றன. அதன்பின் அவன் அருளைப் பெறுவது எளிதாகிவிடுகிறது.