பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 119

யானே பொய்

என் நெஞ்சம் பொய் ஆனால் வினையேன்

அழுதால் உன்னை பெறலாமே

என்றுதானே இறைவனையே கேட்கிறார். அழுது புலம்பவதால்தான் அவரது பாடல்களுக்குத் தனிநயமும் உருக்கமும் ஏற்பட்டு விடுகின்றது. அதுபற்றியே திருவாசகத்திற்கு உருகாத்ார் ஒரு வாசகத்துக்கும் உருகார் - என்ற வாசகமே எழுந்திருக்கிறது. ஆகவே 'அழுது ஆண்டவன் அருளைப் பெறுவதே சிறந்த வழி- என்று மாணிக்க வாசகர் சார்பிலே பேசியவர்கள் வாதிட்டனர்.

'இல்லை யில்லை. அழுவது என்பது வெகு சாதாரண விஷயம். சிறு குழந்தை போல் அழுது அடம்பிடித்துக் காரியத்தைச் சாதித்துக் கொள்வதிலே என்ன சிறப்பு இருக்கிறது? இறைவன் அருளைப் பெறுவதற்கு எத்தனையோ வழிகள். அவற்றில் ஒன்று அழுகை. அதற்காக அதைச் சிறந்த வழி என்று சொல்லிவிட முடியுமா? ஒரு பெரிய நகரம் இருக்கிறது. அதைச் சென்று அடைவதற்குப் பல வழிகள். ஒன்று நல்ல ராஜபாட்டை மலரும் மணமும் அழகும் நிழலும் - கொண்ட அருமையான பாதை. மற்றொரு பாதையோ கல்லும் முள்ளும் நிறைந்த காட்டுப்பாதை - இரண்டுமே நகருக்கு நம்மை இட்டுச்செல்லும் வழிகள்தான் என்றாலும் எந்தப் பாட்டை சிறப்பானது? சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் தேர்ந்தெடுத்தது அந்த எழில் நிறைந்த பாதையைத்தான். ஆண்டாளுக்கு மட்டும் அழத் தெரியாதா என்ன? ஆணாய்ப் பிறந்த மாணிக்கவாசகரே அழுது புலம்பி அமர்க்களம் செய்யும் போது, பெண் ணாய்ப் பிறந்த ஆண்டாளுக்கு அழச்சொல்லியாகொடுக்க