பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பட்டிமண்டபம்

வேண்டும்? ஏன் அழவில்லை? அணைந்து அருள்பெற சந்தர்ப்பம் இருக்கும்போது அழ வேண்டிய அவசியம் என்ன? எந்தப் பெண்ணாவது, எடுத்த எடுப்பிலே ஆடவன் ஒருவனை, அவன் ஆண்டவனாகவே இருந்தாலும் அணைய முற்பட்டு விடுவாளா? அதற்குரிய மனப்பக்குவம் ஆண்டவனை அணையும் தகுதியும் உரிமையும் நமக்கிருக்கிறது என்ற உறுதிப்பாடு இருந் தால்தானே முடியும்? ஆண்டாளுக்கு அந்த நம்பிக்கையும் பக்குவமும் இருந்தது. ஆகையால் அழுது புலம்பி காலத்தை வீணாக்காமல் அணைந்தே அருளைப்பெற முற்படுகிறாள். இறைவனை நாயகனாக பாவனை செய்து கொண்டு வழிபடுவதைத்தான் மதுர பக்தி என்கிறோம். அந்த மதுர பாவன்ை ஆண்டாளுக்கு இயல்பாகவே அமைந்து விடுகிறது. சைவ சித்தாந்தத்திலே பதி - பசு என்றெல்லாம் பேசப்படுகிறதே, அவை எதைக் குறிக்கின்றன? ஆண்டவன் ஒருவனேபதி - பரம புருஷன். மற்றவை எல்லாம் பிரகிருதிகளே - பெண்களே பசுக்களே - என்று தானே மெய்ஞானிகள் கூறுகின்றனர். பசுவானது பதியைச் சென்றடைந்து, தன்னைப் பதி யிடத்திலே ஐக்யப்படுத்திக் கொள்வதைத்தானே ஜீவன் முக்தி என்கிறோம். ஆகவே, ஆண்டாள் மேற்கொண்ட அணைந்து அருள்பெறும் வழிதானே சிறப்பானது?" என்று கேட்டனர் ஆண்டாள் சார்பில் வாதாடியவர்கள்.

நான் ஆண்டாள், மாணிக்கவாசகர் இருவரிடத்திலுமே மிகுந்த பக்தியும் ஈடுபாடும் உடையவன். மாணிக்க வாசகர் கசிந்து கசிந்து பாடிய பாடல்களையெல்லாம் நானும் பலமுறை பாடிப்பாடி உள்ளம் உருகியிருக் கிறேன். அப்படியே ஆண்டாளது நாச்சியார் திருமொழி யையும் திருப்பாவைப் பாடல்களையும் பாடிப் பாடிப்