பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பட்டிமண்டபம்

புணர்ச்சிப்பத்து, குயிற் பத்து எல்லாம் ஏன் பாட வேண்டும்? பாவை பாடிய வாயால் கோவை பாடுக. என்று இறைவனே மாணிக்கவாசகருக்குக் கட்டளை இட்டாரே அதிலிருந்து என்ன தெரிகிறது? அப்பா நீ அழுது புலம்பியதெல்லாம் போதும். இந்த வழியை முயற்சி செய்து பார் - என்று சொல்லுவது போல் இல்லையா? - . . . . .

மாணிக்கவாசகருக்கே இந்த வழியைப் பின்பற்றினால் இறைவனை அடையலாம் - என்ற நிச்சயம் இல்லை. ஆகவேதான் ஆடிப்பார்ககிறார், பாடிப்பார்க்கிறார், தெள்ளேணம் கொட்டுகிறார், திருச்சுண்ணம் இடிககிறார், குயிலைத் தூதனுப்புகிறார், ஏன், சிற்றாடை கட்டி சிறு பெண்ணாக வேடமிட்டு திருவெம்பாவையும் கோவை யாரும் கூடப் பாடிப் பார்க்கிறார். . . .

நெல்லிக் கனியைத் தேனைப் பாலை

நிறையின்னமுதை அமுதின் சுவையைப்

புல்லிப் புணர்வதென்று கொல்லோ

என் பொல்லா மணியைத் புணர்ந்தே!

என்று தானே ஏங்குகிறார்?

ஆண்டாளுக்கு அத்தகைய சங்கடங்கள் எதுவும் இல்லை. காரை பூண்டு, கண்ணாடி காணும் கன்னிப் பருவத்திலேயே, கண்ணனை அடைய, தனக்கென ஒரு வழி வகுத்துக்கொண்டு விடுகிறாள். கடைசிவரை அந்த வழியை விட்டு விலகவே இல்லை. இறைவனை அடைய எண்ணுகின்ற பக்தர்கள் அனைவரும் தத்தமக்கு என்று தனித்தனியே ஒரு வழியை வகுத்துக் கொண்டு விட்டார் கள். இறைவனுக்கும் தங்களுக்குமிடையே ஒரு உறவைக் கற்பித்துக் கொள்வது, அந்த உறவுக்கயிற்றின் உதவியால்