பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 123

இறைவனை எட்டாத உயரத்திலேவைத்து அந்த நிலையி லேயே பக்தி செலுத்துவதுண்டு. சிலர் தம்முடைய எஜமானனாகவே எண்ணி ஆண்டவன் அடிமை பாவத்திலே பக்தி காட்டுவதுண்டு - சுந்தரமூர்த்தி நாயனா ரைப் போன்றவர்களோ இறைவனது தோள்மேலேயே கை போட்டு தோழமை கொண்டாடுவதும் உண்டு. பெரியாழ்வாரைப் போன்ற பழுத்த அனுபவமுள்ளவர் களோ, இறைவனைக் குழந்தையாகவே பாவித்து மடியில் கிடத்தித் தாலாட்டும் பாடிவிடுவதுண்டு. இவை எல்லாவற்றுக்கும் மேலே ஒரு படி போய், இறைவனை நாயகனாகவே எண்ணிக்காதல் செய்கிறவர்களும் உண்டு. இதைத்தான்மதுரபாவம் என்பார்கள். அன்னைதயையும், அடியாள் பணியும், புவிப்பொறையும், நல்ல தோழமை யும் நாயகனது இன்பத்துக்கே நிலைக்களமாய் விளங்கு கின்ற நிலையும், இந்த மதுர் பாவனைக்குத் தான் உண்டு. இறைவனது காட்சியைப் பெற்ற பின்பு ஏற்படும் அதிதீவிர பக்தியே பிரேமையாகும். இதுவே பக்தியில் உயர்வற உயர்ந்த நிலையாகும். இறைவனை நாயகனாக எண்ணி அன்பு செய்யும் நெறியான மதுரபாவனை பெண்ணுடலோடு பிறந்தவர்க்கு மட்டும் உரியதன்று, ஆண்களுக்கும் அது உரியதே. ஆணாயினும்சரி, பெண் ணாயினும் சரி, காமநினைவு மாய்ந்து மனம் தூய தாகும்போதுதான் மதுரபக்தி பிறக்கும். அந்த ஒரு வழியைத்தான் தனக்கெனத் தேர்ந்தெடுத்தாள் ஆண்டாள், அதில் வெற்றியும் கண்டாள் - பரமன் மீது கொண்ட பக்தியால் காதலால்.

எழிலுடைய அம்மனைமீர்

என்னரங்கத்தின்னமுதர்