பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பட்டிமண்டபம்

குழலழகர் வாயழகர்

கண்ணழகர், கொப்பூழில் எழுகமலப் பூவழகர்

எம்மானார் என்னுடைய கழல்வளைய்ைத் தாமும்

கழல் வளையே ஆக்கினரே.

என்றுதானே பாடுகிறாள். கோதையின்காதலை உகந்து தானே, மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து அவளை ஏற்றுக் கொள்கிறான். மாணிக்கவாசகரது முரட்டுக் கரங் களுக்கும், கண்ணிர் வெள்ளத்துக்கும் தப்பித் தப்பி யோடும் இறைவன், கோதையின் மெல்லிய வளைக் கரங்களுக்கு வளைந்து கொடுத்து விடுகிறானே அழுதும் அருள் பெறலாம்தான். ஆனால் அழுது அருள்பெறுவதே இறைவனை அணைவதற்குத்தானே? ஆகவே அணைந்து அருள்பெற்ற ஆண்டாள் வழியே சிறந்தது என்றுதான் தீர்ப்புக் கூறுகிறேன் நான்.