பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பட்டிமண்டபம்

விவாதத்தைக் கொடுத்துவிட்ட காரணத்தால், அவர்களது பக்தியை எடைபோடுகிறோம், அல்லது குறைவாக மதிப்பிடுகிறோம் என்றோ - வீண் கலகத்துக்குப் பாதை வகுக்கிறோம் என்றோ நினைப்பது கூடாது. எந்தத் தொண்டரது பக்தியையும் குறைவு படுத்தும் எண்ணம் நமக்குக் கிடையாது. பக்தியிலே உயர்வு தாழ்வு கற்பிக்க வேண்டும் என்ற எண்ணமும் கிடையாது. மூவருமே அவரவர் வாழ்க்கை, சந்தர்ப்பம், சூழ்நிலை இவற்றுக் கேற்பச் செயல்புரிந்திருக்கிறார்கள். அவர்களது பக்தியின் அடிப்படையில் அவர்கள் நிகழ்த்திய செயல்களின் தாரதம்மியத்தை அளவிடுவதுதான் இந்தப் பட்டிமன்ற விவாதத்தின் நோக்கம். இதை மனதில் கொண்டோமா னால் அப்புறம் எவ்வித மனக்கசப்புக்கும் இடமேயிராது.

இந்த விவாதத்திலே கலந்து கொண்டவர்கள்.அத்தனை பேருக்கும்துணையாகநின்றது பட்டினத்தார் பாடல்தான்.

வாளால் மகவரிந்துட்ட வல்லேனல்லேன்

மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேனல்லேன்

தொண்டு செய்து நாளாறில் கண்ணிடந்தப்ப வல்லேனல்லேன்

நான் இனிச் சென்று ஆளாவதெப்படியோ, திருக்காளத்தி

அப்பருக்கே! - இந்தப் பாடல்தான் இன்றைய விவாதத்துக்கே அடிப்படையாக விளங்குகிறது.

வாளால் மகவரிந்துட்டிய சிறுத்தொண்டரது கதையும், மாது சொன்ன சூளால் இளமைத் துறவு மேற்கொண்ட திருநீலகண்டரது கதையும், நாளாறில் கண் இடந்தப்பிய