பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் 127

கண்ணப்பரது கதையும் நமக்குத் தெரிந்தவை தான். பக்தி மேலீட்டால் அவர்கள் நிகழ்த்திய செயல்களைப் பற்றி யெல்லாம் மூன்று கட்சிக்காரர்களும், வெகு திறமையாக வாதிட்டார்கள். - -

"சிறுத்தொண்டரும் அவரது மனைவி, திருவெண் காட்டு நங்கையும் செய்த தொண்டுதான் மிகச்சிறப் பானது; சிவனடியார்களுக்கு அமுதுசெய்விக்காமல் தாம் அமுது செய்வதில்லை என்றே நோன்பிருந்தார்கள் அவர்கள். உண்டி கொடுத்தோர் - உயிர்கொடுத்தோர் என்பது ஆன்றோர் மொழி. அந்தத் திருப்பணியைச் சிறப்பாகவே செய்தார் சிறுத் தொண்டர். அவரைச் சோதிக்கவே, இறைவன் சிவனடியார் வேடம் பூண்டு வந்து, ஒரு குலத்துக்கு ஒரு மகனை, தாய் பிடிக்க, தந்தை அரிந்து கறி சமைத்துத் தரும்படி கேட்டபோது கூட சிறுத் தொண்டர் மயங்கவில்லை. யாதும் எமக்கு அரியதன்று என்றே சொல்கிறார். சிவனடியார் விரும்பிய வண்ணமே, தம் குலத்துக்கொரு மகனான சீராளனை, பச்சிளம் பாலகனை - தாய் பிடிக்க அரிந்து, கறி சமைக்கவும் செய்கிறார். அந்தச் செயலையும் - சிவனடி யார் விரும்பிய வண்ணம் மனமகிழ்வோடு செய்கிறார். இப்படி ஒரு அரிய செயலை நம் கண்டதுமில்லை - கேட்டதுமில்லை. திருநீலகண்டர் இளமை துறப்பதும், கண்ணப்பர் கண் இடந்து அப்புவதும் அவ்வளவு அரிய செயல்களல்ல. அவர்கள் இருவரது செயல்களோடு ஒப்பிடும்போது, சிறுத்தொண்டரது செயல், மிக மிக அரிய செயலாக, சிறந்த செயலாக உயர்ந்து நிற்கிறது" - என்று அடித்துப் பேசினார்கள் சிறுத்தொண்டர் கட்சி யிலே வாதிட்டவர்கள். . - -