பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 14

வீட்டிலே மட்டுமல்ல, வெளியிலும் எதிர்க்கட்சிதான்! சபையோரும் எங்கள் இருவரையும் மேடையில் பட்டி மண்டபதம்பதிகளாகவே - எதிரெதிர்கட்சிகளில் நிறுத்தி வைத்து மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். சபையோர் இருக்கட்டும், எந்தத் தந்தையும் தம் மகளும் மருமகனும் சண்டை போட்டுக் கொள்வதை விரும்ப மாட்டார். மாமாஅதற்கு விதிவிலக்கு. மகள் ராஜேஸ்வரி யும், நானும் போட்டுக் கொள்ளும் சண்டையை எல்லாம் விரும்புவதோடு மட்டுமல்லாமல், ரசிக்கவுமே செய் வார்கள் சண்டை என்றால் பட்டி மண்டப அரங்குகளிலே போடுகின்ற சண்டைதான் (வீட்டிலே நாங்கள் போடுகின்ற சண்டையை எல்லாம்.அவர்கள் காது கேட்கப் போட்டதில்லை!) மகள் துடுக்குத் தனம் தெரிந்த காரணத்தினால், எந்த நேரத்தில் என் காலை வாரிவிடு வாளோ என்று பயந்து, ராஜேஸ்வரியை மாப் பிள்ளைக்கு முன்னால் போட்டு விடுங்கள்' - என்று நண்பர் பாபுராஜூவுக்கு எச்சரிக்கை விடுத்ததும் உண்டு. அவளும் நானும் எதிரெதிர் கட்சிகளில் அமர்ந்து மாமா நடுவராகவும் இருந்துவிட்டால் சபையோர் கல கலப்புக்குக் கேட்கவே வேண்டாம். இப்படி மகளும் மாப்பிள்ளையும் எதிரும் புதிருமாக வாதிடுவதைப் பார்த்து முகமெல்லாம் மலரமாமா அவர்கள் ரசிப்பதைப் பார்த்துப் பார்த்து பரவசம் அடைந்தவர் நண்பர் பாபுராஜு அவர்கள். -

மாமா அவர்கள் தலைமையில் வாதிடும் பாக்கியம் எங்களுக்குக் கடைசியாகக் கிடைத்தது பேச்சிப் பாறை பட்டி மண்டபத்தின் போதுதான். அவர்கள் ஏறக்குறைய இருபத்து நான்கு பட்டிமண்டபங்களுக்குத் தலைமை வகித்து தீர்ப்புக் கூறி விட்டார்கள். தமது மணிவிழா