பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 . பட்டிமண்டபம்

திருநீலகண்டருக்கு வக்காலத்து வாங்கியவர்கள் மட்டும் சளைத்தவர்களா? 'பிள்ளைக் கறி சமைப்பது என்பது, அதுவும் தம் ஒரே மகனைத் தம் கையாலேயே அரிவது என்பது எப்படிச் சிறந்த செயலாகும் . கொடுரத்தின் எல்லைக்கே போய் விடுகிறார் சிறுத் தொண்டர். நரசிம்மவர்மப் பல்லவருடன் சேர்ந்து வாதாபி நகரத்தையே தீக்கிரையாக்கிய பழைய பரஞ் சோதி தானே? அவரிடம் எப்படி ஈவு இரக்கத்தை எதிர் பார்க்க முடியும்? ஈவு இரக்கம் இல்லாதவன் சிறந்த செயல்புரிவது எங்ங்னம்? அப்படித்தான் கண்ணப்பரது செயலும் - முரட்டுத்தனமும் மூடத்தனமும் மிகுந்த ஒன்று. திண்ணனார் கண்ணைத் தோண்டி எடுத்து அப்பியதிலே சிறப்பு எங்கிருக்கிறது? ஆனால் திருநீல கண்டரோ, இளம் வயதிலேயே, அழகில் மகாலட்சுமி யையும் - கற்பில் அருந்ததியையும் மிஞ்சிய, இளம். மனைவி அருகிலிருக்கும்போதே துறவு நெறியைக் கடைப்பிடித்தவர். 'எம் மைத் தீண்டினால் திருநீல கண்டம் - என்று மனைவி ஊடல் காரணமாக ஆணை யிட்டதற்குக் கட்டுப்பட்டு, அன்று முதல் பெண் னினத்தையே மனதாலும் தீண்டாதவராக வாழ்ந்தவர். புலனடக்கம் என்பது, காட்டில் தவம் செய்யும் முனிவர் களுக்குக் கூட கிட்டுவது அரிது. ஆனால் இல்லறத்தி லேயே இருந்து, அழகும் இளமையும் நிறைந்த மனைவி துணை இருக்கும்போது, துறவு மேற்கொள்வது என்பது சாமான்ய காரியமா? இதைவிட அரிய செயல் என்ன இருக்க முடியும் - இறைவன் நாமத்தின் மீது ஆணை யிட்டாள் என்பதற்காக, இளமையையே புறக்கணித்த செயலை விடச் சிறந்த செயல் இருக்க முடியுமா? - என்றெல்லாம். வாதம் புரிந்தனர் - திருநீலகண்டரது கட்சியிலே பேசியவர்கள். -