பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 429

கண்ணப்பர் கட்சியினர் விடுவார்களா? 'திருநீல கண்டர் செய்த காரியத்திலே சிறப்பெங்கே இருக்கிறது? பரத்தையிடம் சென்று திரும்பிய காரணத்தால் ஏற்பட்ட மனக்கசப்பில் மனைவி, எம்மைத் தீண்டாதீர்' என்று ஆண்டவன் பெயரால் ஆணையிட, கணவர் அதற்குக் கட்டுப்பட்டார். நல்ல சிவபக்தரானதினாலே இறைவன் பெயரால் இடப்பட்ட ஆணையை மீறத்துணியவில்லை. அவ்வளவுதான். மேலும், பக்தியில் திளைப்பவர் களுக்குப் பெண்ணாசையைத் துறப்பது ஒன்றும் பெரிய காரியமல்ல. ஆகவே வாழ்க்கையின் இன்பங்களை எல்லாம் நுகர்ந்து அனுபவித்த பின்னர், துறவு மேற் கொள்வதில் சிறப்பென்ன இருக்கிறது? சிறுத்தொண் டரது செயல் செயற்கரிய செயல்தான் - சந்தேகமில்லை. ஆனால் சிறுத்தொண்டரது எனக்கு யாதும் அரியதன்று என்று பேசுகிறாரே. தாம் பெற்ற பிள்ளையை ஒரு தந்தை அரிந்து கறி சமைப்பதிலே என்ன சிறப்பு இருக்கிறது? இறைவனுக்காகவே செய்த காரியமானாலும்கூட, அரிய செயல் என்ற அளவிலேதான் கொள்ள முடியுமே தவிர சிறந்த செயல் என்று கொள்ளமுடியாது. ஆனால் கண்ணப் பர் கதையே வேறு. காளத்தி வேடனான திண்னன், காளத்தி ஈசரான குடுமித் தேவருடன் கொண்ட உற வெல்லாம் ஆறேநாள் உறவுதான். ஈசனைப்பற்றியோ அவன் அருளைப் பற்றியோ முன்பின் அறியாதவன், கன்னி வேட்டைக்கு வந்த இடத்திலே குடுமித் தேவரைக் கண்டான். 'மோகமாய் ஒடிச் சென்றார் - தழுவினார் - மோந்து நின்றார் - கன்று அகல்புனிற்று ஆப்போல்வார் என்றெல்லாம் பாடுகிறார் சேக்கிழார். அவன் இறை வனுக்குத் தமது வாயில் கொணர்ந்த நீரால் மஞ்சன மாட்டியதும், குஞ்சியில் சூடிய மலரால் அர்ச்சித்ததும்,