பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 - பட்டிமண்டபம்

தன் பல்லால் அதுக்கி ருசி பார்த்து வெந்த இறைச்சியைப் படைத்ததும் அறியாமையால் செய்த காரியங்களே தவிர, அந்த அன்பின் ஆழத்தை யாராவது மறுக்க முடியுமா? இறைவன்கண்ணிலே உதிரம் கொட்டுகிறது என்றால் தம் கண்ணைத் தோண்டி எடுத்து அப்பிய அன்பை என்ன வென்று சொல்ல. இறைவனது மறுகண்ணில் உதிரம் கொட்டத் தொடங்கிய போதும், கொஞ்சமும் தயங்காமல் தமது இரண்டாவது கண்ணையும் தத்தம் செய்யத்துணிந்த செயலைவிட, அரியதும் சிறந்ததுமான செயல் வேறு என்ன இருக்க முடியும்? ஆகவே தானே, சிறுத்தொண்டர் பிள்ளைக் கறி சமைத்தபோதும், திருநீலகண்டர் துறவு மேற்கொண்ட போதும் வாளாவிருந்த இறைவன் 'திண்ணனார் கண்ணில் ஊன்றத் தரித்திலர் தேவதேவர்' என்கிறார் சேக்கிழார். ஆண்டவனே தீர்ப்பளித்து விட்ட போது... தலைவர் வேறென்ன தீர்ப்பளிக்க முடியும்" - என்று என்மீதும் கொஞ்சம் சாடிப் பார்த்தார்கள். நானா அதற்கெல்லாம் அஞ்சுகிறவன்? -

மூன்று தரப்பு வாதங்களையும் கேட்டபோது, எனக்கே கொஞ்சம் திகைப்பாகத்தான் இருந்தது. எப்படியடா, தீர்ப்புச் சொல்வது என்று. அவ்வளவு திறமையாக அவரவர் கட்சியை எடுத்துரைத்தார்கள். சிறுத்தொண்டர் கட்சியிலே பேசியவர்கள், பிள்ளைக்கறி சமைப்பதைப் போல் அரியசெயல், சிறந்த செயல் வேறு கிடையாது. அதுவும் ஒரு குலத்துக்கு ஒரு மகனை, தாய் பிடிக்கத் தந்தை அரிவது என்றால் சாமான்யமா - என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால் ஒன்றை மறந்து விட்டார்கள். அவரிடம் சிவனடியார் நரமாமிசம் கேட்கும் போதும் சரி - ஒரு குலத்துக்கொரு மகனை, தாய் பிடிக்க தந்தை அரிந்து தர வேண்டும் என்று கேட்டபோதும் சரி, எதற்கும்