பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் 131

தயங்காமல் 'யாதும் எமக்கு அரிதன்று' என்கிறார். அப்படி அவரே சொல்லி விடுவதால் எந்த அரிய செயலும் வலு இழந்து விடுகிறது. அத்துடன் 'யாதும் எமக்கு அரிதன்று: - என்று சொல்கிற போது அதிலே ஆணவம் தொனிக்கக் காண்கிறோம். தம்மால் எதையும் சாதிக்க முடியும் எதுவும் அசாத்தியமல்ல என்று சொல்வது ஆணவததின் குரலாகவேபடுகிறது. மேலும், சிவனடியார் உடனிருந்து உண்ண மைந்தனை அழைக்கச் சொன்னபோது, சிறுத் தொண்டரும் மைந்தா வருக என்று அழைத்துத் தான் பார்க்கிறார். சீராளன் வந்ததாகத் தெரியவில்லை. சிறுத் தொண்டருக்கே கறியாய்ச்சமைந்த மகன்வருவான் என்ற நம்பிக்கை இல்லையோ என்னவோ? - ஆனால் அவர்

மனைவி

"செய்ய மணியே! சீராளா!

வாராய்! சிவனார் அடியார் யாம் உய்யும் வகையால் உடனுண்ண

அழைக்கின்றார்” என்று ஒலமிட சீராளன் சதங்கை குலுங்க ஓடோடி

வந்து விடுகிறான். சிறுத் தொண்டரது செயலை அரிய

செயலாகவே கொண்டாலும், அதில் ஓரளவு ஆணவம் கலந்து விடுவதால் சிறந்த செயலாகக் கொள்வதற் கில்லை. - - -

திருநீலகண்டர் விவகாரமோ ரஸமானது. வாழ்க் கையை நன்றாக அனுபவித்தவர் அவர். மகாலட்சுமி போல் அழகிற் சிறந்த இளம் மனைவி துணை இருக்கும் போதே, பரத்தை வீடு தேடிச் சென்றவர். அதன் காரண மாக மன்னவி 'எம்மைத் தீண்டினால், திருநீலகண்டம்" என்று ஆணையிட்டதால்கட்டுப்பட்டவர். வாழ்க்கையின்