பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 . - பட்டிமண்டபம்

இன்பங்களையெல்லாம் நன்கு அனுபவித்த பிறகு துறவு மேற்கொள்வது என்பது அத்தனை சிரம சாத்தியமான காரியமாகத் தோன்றவில்லை. சிறந்த சிவபக்தரானபடியி னாலே, ஆண்டவன்.பேரால் இட்ட ஆணையை மீறத் துணிவற்றிருந்தார் என்றுதான் தோன்றுகிறது. அவரது செயலை அரிய செயலென்று அவர் கட்சிக்காரர்கள் சொன்னாலும் சிறந்த செயல் என்று நான் சொல்லுதல் இயலாது. - • *

மிஞ்சி நிற்பது காளத்தி வேடன்தான். திண்ணன் பிறவியிலேயே வேடன், வயதிலும் இளைஞன். முதன் முதலாகக் கன்னி வேட்டைக்குச் சென்ற இடத்திலே குடுமித் தேவரைக் காண்கிறான். கண்ட மாத்திரத்திலே அவன் அடைந்த நெகிழ்ச்சியையும் பரவசத்தையும் சேக்கிழார் அழகாக வர்ணிககிறார்.

மாகமார் திருக்கா

ளத்திமலை எழு

கொழுந்தாய் உள்ள ஏக நாயகரைக்

கண்டார்: எழுந்த

உவகை அன்பின் வேகமானது மேல்

செல்ல, மிக்கதோர்

விரைவினோடு மோகமாய் ஓடிச்

சென்றார்; தழுவினார்:

மோந்து நின்றார்: திண்ணனுடைய பக்திப் பரவசத்தைப் பார்க்கின்ற போது, அந்த கங்கை வேடனான குகனே நமக்கு