பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 133

நினைவுக்கு வருகிறான். 'கண்ணனைக் கணணில் நோக்கிக் கனிந்தனன். தீராக் காதலன்' - என்றெல்லாம் குகனைகம்பன் வர்ணிப்பான். அப்படி ஒரு கள்ளமில்லாத அன்பு, கரை காணாத பக்தி. -

நங்குலத் தலைமை

விட்டான், நலப்பட்டான்

தேவர்க்கு -

என்று திண்ணனுடன் வந்த வேடனான நாணன் சொல் கிறான். திண்ணன், வாயிலே மஞ்சன நீரையும், குஞ்சி யிலே அர்ச்சனைக்குக் காட்டுப் பூக்களையும், பல்லால் அதுக்கிச் சுவை பார்த்துத் தேர்ந்த இறைச்சித் துண்டு களையும் கொண்டு வருவது நமக்கும், சிவகோசரியா ருக்கும் அநாசாரமாகப் படலாம். கங்கை வேடன் இராமனுக்கு தேனும் மீனும் கொணர வில்லையா? 'பரிவினில் தழிய என்னில் பவித்திரம்' - என்று ராமன் சுற்றியிருந்த முனிவர்களுக்கு உணர்த்தவில்லையா? அப்படி அன்பு காரணமாகவும், பக்தியின் காரணமாகவும் திண்ணன் செய்யும் அந்த அநாசாரமான காரியங்கள் கூட இறைவனுக்கு உகப்பாகத் தானே இருக்கின்றன?

அதனால்தானே, இறைவன் சிவகோசரியார் கனவில் தோன்றி திண்ணனைப் பற்றிப் பேசுகின்றபோது,

அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும்

அவனுடைய அறிவெல்லாம்

நமை அறியும் அறிவென்றும்

அவனுடைய செயலெல்லாம்

நமக்கினிய வாம் என்றும்