பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பட்டிமண்டபம்

அவனுடைய நிலை இவ்வாறறி நீ!

என்று பாராட்டுகின்றார்.

திண்ணனுடைய அன்பு குறித்தோ, பக்தி குறித்தோ இறைவனுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. அந்த ஈடு இணையில்லாத அன்பை, பக்தியை சிவகோசரியாருக்கு உணர்த்த வேண்டியே தம் கண்ணில் உதிரம் பெருகச் செய்கிறார். ஆனால் சிறுத்தொண்டர் விஷயத்திலும், திருநீலகண்டர் விவகாரத்திலும் இறைவன் அவர்கள் பக்தியின் ஆழத்தையே சோதித்துப் பார்க்கிறான். திண்ண னுடைய பக்தி முடிந்த முடிவு. அதைச் சிவகோசரியாரும் உணரவேண்டும் என்பதற்காக, தானே சோதனைக்குரிய பொருளாகி விடுகிறான், இறைவன். ஊனுக்கு ஊன்' என்ற முறையிலே திண்ணன் ஒரு கண்ணை இடந்து அப்பியாகி விட்டது. மறுகண்ணிலுமல்லவா குருதியைப் பெருக விடுகிறான்; அப்போதும் திண்ணன் சற்றும் சுணங்காமல் தன் மறு கண்ணையுமல்லவா அகழ்ந் தெடுக்கத் துணிந்து விட்டான் சிவகோசரியார் பதறி னாரோ என்னமோ - நாம் பதறுகிறோம். நம்மை விட இறைவன் பதறுகிறான் - பதறியது மட்டுமா

நில்லு கண்ணப்ப!

நில்லு கண்ணப்பு - என்

அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப!

என்று,

அன்னவன் தன் கை -

அம்பொடும் அகப்படப்

பிடித்தே விடுகிறானே!