பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 135

திண்ணனார் கண்ணில் ஊன்றத்

தரித்திலர் தேவதேவர் -

என்றல்லவா பாடுகிறார் சேக்கிழார் பெருமான். சிறுத்தொண்டர் வாளால் மகவை அரிந்தபோது பதறாத தேவதேவன், திருநீலகண்டர், மாது சொன்ன சூளால் இளமை துறந்தபோது பதறாத தேவதேவன் - திண்ணன் அம்பைக் கண்ணில் ஊன்றியதும் துடிதுடித்து விடுகிறான்! அதனால்தானே, சேக்கிழார் பெருமானும் உருகி, உருகி, நெகிழ்ந்து, நெகிழ்ந்து 186 பாடல்களைக் கண்ணப்பருக் காக வாரி வழங்கியிருக்கிறார். சிறுத்தொண்டரையும், திருநீலகண்டரையும் பக்தியினால் கனிய வைக்கிறான் இறைவன். ஆனால், கண்ணப்பர் கதையிலோ, ஆறே நாள் உறவிலே தானே கனிந்து விடுகிறானே. இன்னும் நான் தனியாக வேறு சொல்ல வேண்டுமா, செயற்கரிய தொண்டு புரிந்த மூவர் செயலிலும் சிறந்த செயல் புரிந்த வர் யார் என்று. -