பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 137

குமோ என்று ஐயம் ஏற்படலாம். காரணம், தொழுகையை விடாப்பிடியாக ஒரு நாளைக்கு ஐந்து தடவையாவது செய்கிறவர்கள் ஆயிற்றே என்பதனால் இருக்கலாம். தொழுகை என்பது அப்படி முஸ்லீம் சகோதரர்கள் மட்டும் கைக்கொள்வது அன்று. எல்லோரும், அதிலும் இந்துக்கள், சைவரும் - வைணவரும் செய்கின்ற நித்ய கருமங்களில் ஒன்றுதான். அதை மாணிக்கவாசகரே சொல்கிறாரே தெள்ளத் தெளிவாக, திருப்பெருந்துறை யில், அங்கு தன்னை ஆட்கொண்ட சிவபெருமானைத் துயில் எழுப்புவதற்காகத் திருப்பள்ளி எழுச்சி பாடுகிறார் மாணிக்கவாசகர். சிவபிரானது திருவோலக்கத்தைக் காண வந்து காத்துக்கிடக்கும் கூட்டத்தை வரிசைப்படுத்து கிறார். வீணையும், யாழும் ஏந்திய கையராய் பலர் இன்னிசை மிழற்றிக் கொண்டு ஒரு பக்கம் இருக்கிறார் களாம். வேதம் ஒதும் வேதியர் ஒருபுறம். இறைவனுக்கு அணிவதற்கு மலர்களைத் தொடுத்து மாலையாக்கி அம்மாலைகளை ஏந்திக் கொண்டு நிற்பார் ஒருபுறம், இன்னும் தொழுது கொண்டு நிற்பவர்களும், அழுது கொண்டு நிற்பவர்களும், துவண்டு நிற்பவர்களும் ஆகப் பலர் அங்கே இருக்கின்றனர். இவர்களை விடுத்துத் தலைமேல் கூப்பிய கையராய் வழிபாடு செய்யும் அன்பர்கள் பலருமே அங்கு இருக்கிறார்கள். ஆதலால், 'இத்தனை பேர் இப்படி உன் சந்நிதியில் காத்துக் கிடப்பதனால் நீ விரைவில் துயில் நீங்கி எழுந்து எல்லோருக்கும் அருள் செய்வாயாக' என்று பாடுகிறார்.

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்