பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பட்டிமண்டபம்

வைபவத்திற்கு முன்னரேயே இருபத்தைந்தாவது பட்டிமண்டபத் தலைமைக்கு பல இடங்களிலிருந்து அழைப்பு வந்தும், அங்கு செல்ல முடியாது ஏதாவது தடங்கல் ஏற்பட்டுக் கொண்டே வந்தது. உடல் நிலையும் இடம் கொடுக்கவில்லை. இருபத்தி ஐந்தாவது பட்டிமண்டபம் இப்படித் தட்டித் தட்டிப் போகிறதே என்பதில் அவர்களுக்கு மிகுந்த குறை. அந்தக் குறையும் பேச்சிப் பாறை பட்டி மண்டபத்துக்குத் தலைமை தாங்கியபோது நீங்கியது. அதுவே மாமா அவர்களின் வெள்ளி விழாப் பட்டி மண்டபம்!

அப்போது நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அரசாங்க அலுவலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நண்பர் திரு. T.S. ராமலிங்கம் (அப்போது அங்கு மாவட்ட நீதிபதியாக இருந்தவர்.) தலைமையின் கீழ் ஒர் இலக்கிய வட்டத்தை நடத்தி வந்தோம். மாதம் இரு முறை இலக்கியக் கூட்டங்கள் நடைபெறும். திருநெல்வேலி, அருகாமையிலேயே இருந்ததால் மாமாவும் அவ்வப்போது வந்து கலந்து கொண்டு எங்களுக்கு ஊக்கம் தருவார்கள். கூட்டங்களை வெவ்வேறு இடங்களில் நடத்துவதுமுண்டு. அப் படித்தான் 14-3-65 அன்று நாகர்கோவிலை அடுத்துள்ள பேச்சிப்பாறை அணைக்கட்டை ஒட்டியுள்ள இடத்திலே, ஒரு பட்டி மண்டபத்துக்கு ஏற்பாடு செய்தோம். மாமாவின் தலைமையிலே, தாயன்பில் தலை நின்றவர் கோசலையா, கைகேயியா, சுமித்திரையா?- என்பதுதான் விவாதத்துக்குரிய பொருள். அரசாங்க அலுவலர்கள் மட்டுமின்றி, அவர் தம் துணைவியரும் பங்கு கொண்டு, அமோகமாக நடந்தது விழா. காலையில் ஆரம்பித்த விவாதங்கள், மத்தியான விருந்துக்குப் பின்னும்