பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பட்டிமண்டபம்

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்

திருப்பெருந்துறையுறை சிவபெருமானே

என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

என்பதுதான் அவரது பாடல். இப்பாடலிலிருந்து இறைவனை, அவனது திருக்கோயில் சென்று வழிபடும் முறை எது என்று எளிதாகத் தெரிந்து கொள்கிறோம். அப்படி வழிபாடு செய்வதையே அன்று தொழுகை என்று குறித்திருக்கின்றனர். நாம் அந்தத் தொழுகையை வழி பாடு என்று வழங்கி வருகிறோம். முஸ்லீம் சகோதரர்கள் தொழுகை என்றே வழங்கி வருகிறார்கள். அவ்வளவு தான். இப்பட்டிமன்றத்தில் விவாதிப்பதற்குத் தலைப் பைத் தந்ததே மணிவாசகரது இந்தப்பாட்டுதான் என்று நான் சொன்னால், நீங்கள் மறுக்க முடியாது.

இனிபக்தி செய்வது என்றால் என்ன என்று விசாரணை பண்ணலாம். உலகமே அன்பு மயமாகத்தான் உருவாகி இருக்கிறது. ஒருவருக்கொருவர், ஒன்றுக்கொன்று கவர்ச்சி உடையதாய் இருந்து வருகிறது. இந்த அன்பையே பிரேமை என்றனர் வட மொழியாளர். 'அநிர்வசனியம் பிரேம சொரூபம்' என்றார் நாரத முனிவர். பிரேமை அல்லது'அன்பு என்பது என்ன என்று சொல்லும் திறத்தது அன்று என்பதே நாரதர் காணும் முடிவு. உண்மைதான். அன்புதான் எப்படி எப்படி எல்லாம் என்ன என்ன பெயர்களை எல்லாம் தாங்கி வருகிறது. தாய் தான் பெற்ற குழந்தையிடம் காட்டும் பாசம் அன்பு என்று பேசப்படு கிறது. இளவயதுள்ள ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் கவர்ச்சியைக் காதல் என்கிறோம். வயது முதிர்ந்தவர்கள் இளையவர்களிடம் காட்டும் அன்பைப் -