பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 139

பரிவு என்கிறோம். இப்படி பலப் பல பெயரில் அழைக்கப்படும் அன்பை மனிதன் தன்னைப் படைத்த தலைவனை நோக்கித் திருப்பும்போது அதைப் பக்தி என்கிறோம். அந்த பக்தியைச் செலுத்துகின்ற முறையைத் தான் வழிபாடு என்று உரைக்கிறோம். பக்தி செலுத்து வதற்கு உரிய வழி, வழிபாடு என்று தெரிந்த நாம் அந்த வழிபாட்டு முறைகள் என்ன, அந்த வழிபாடுகளில் எது எளிதான முறை, எது சிறந்த முறை என்று தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?

இறைவன் கோயில் கொண்டிருக்கும் திருக்கோயி லுக்குச் செல்லுதல், அவனை வலம் வருதல், அவன் சந்நிதி முன் நின்று வணங்கல், அவன் புகழ் பாடுதல், அவன் திருவடிகளில் விழுந்து வணங்கல் - எல்லாம் தொழுகை என்று கூறப்படுகிறது. . . .

வணங்கத் தலை வைத்து வார்கழல் வாய்

வாழ்த்த வைத்து இணங்கத் தன் சீரடியார்

கூட்டமும் வைத்து எம்பெருமான் அணங்கொடு அணிதில்லை

அம்பலத்தே ஆடுகின்ற குணம் கூறப் பாடிநாம்

பூவல்லிகொய்யாமோ

என்று மாணிக்கவாசகர் பாடும்போது தலை தாழ்த்தி வணங்குவன்.தயும் அவனது வார்கழலை வாழ்த்துவதை 'யும் சீரடியார் கூட்டத்தோடு நின்று தொழுவதையுமே பாராட்டி இருக்கிறார். இப்படி எல்லாம் திருக்கோயில் சென்று “தொழுவது பக்தி செலுத்துவதற்கு எளிதான முறை' - என்று வாதித்தனர் தொழுகைக் கட்சியார்.