பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 பட்டிமண்டபம்

'இல்லை, இந்தத் தொழுகையைப் பலர் முழு ஈடு ப்ாட்டோடு செய்வதில்லை, நான் கும்பிடும் கும்பிடு அரைக் கும் பிடாதலால், நான் பூசை செய்தல் முறையோ?" என்று பக்தர் பலர் அங்கலாய்த் திருக் கிறார்கள் என்று அழுகைக் கட்சியினர் வாதித்திருக்கின்ற னர். உண்மைதான். இதயத் தோடு செய்யாத எந்தப் பூசையும் பக்தி வளர்வதற்குத் துணை புரியாதுதான். ஆனால், இங்கு இந்த அரைகுறைத் தொழுகையைப் பற்றிப் பேச்சில்லை. இதயக் கனிவோடு செய்யும் தொழுகையைத்தான் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படித் தொழுவது தானே தொழுகை.

காதலாகிக் கசிந்து கண்ணி மல்கி ஒதுவார்தம்ம்ை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது, நாதன் நாமம் நமச்சிவாயவே

என்றுதானே பாடினார்.அப்பர். பக்தியால் மனம் உருகி ஆனந்தக்கண்ணிர் பெருக்கி எம்பெருமானது திருநாமங் களைச் சொல்லுவார்களை நல்ல முக்தி நெறியிலே செலுத்துவது, 'நமசிவாய' என்ற பஞ்சாக்கிர மந்திரமே என்றார்.அவர். . -

மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரையார் கழற்கு என் கைதான் தலைவைத்து கண்ணி ததும்பி

வெதும்பி உள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி

சய சய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன் உடையாய்

என்னைக் கண்டு கொள்ளே