பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 141

என்று மாணிக்கவாசகர் பாடும்போது மயிர்க் கூச் செறிந்து, கண்களில் நீர்ததும்பி, மனங்கசிந்துதுதிக்கின்ற நிலையை விளக்குகிறார். வெறும் கண்ணிர் விடுப்பதே அழுகை இல்லாமல், மனங் கசிந்து அழுவதே அழுகை என்று குறிக்கிறார். இதற்கும் மேலே ஒரு படிபோய் அவர் சொல்கிறார். - -

ய்ானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் - ஆனால் வினையேன் அழுதால்

உன்னைப் பெறலாமே

என்றே பாடுகிறார். இறைவனை அழுது அழுதுதான் அடைய வேண்டும் என்று அறுதியிட்டு விடுகிறார். உண்மைதான். மனத்திலே ஒரு கசிவு, அதன் மூலம் இறைவனிடம் செலுத்தும் பக்தியிலே ஒரு கனிவு ஏற்படுவதற்கு அழுவது தான் வழி என்று அறிகிறோம் நாம். ஆனால், இப்படி மனங் கசிந்து அழுவது எளிதான காரியம் அல்லவே என்பதுதான் தொழுகைக் கட்சியார் வாதம். பார்க்கப் போனால், அழுகையுமே ஒருவகையில் தொழுகைதானே? ஆதலால், பக்திக் கனிவிற்கு அழுகை தான் துணைபுரியும் என்று கூறுவது சிறப் பல்லவே என்கின்றனர் தொழுகைக் கட்சிக்காரர்கள். இப்படி விவாதித்து தொழுகைக் கட்சியினர் வெற்றி காண முடியாது. அழுகையும் தொழுகையைச் சேர்ந்ததுதான் என்றால், மாணிக்கவாசகர் ஏன் தொழுகையர், அழுகையர் என்று வேறு படுத்துகிறார். இன்னும் ஒரு பாட்டிலே, அழுகையையும், தொழுகையையும் பிரித்தே பாடுகிறார்.

அழுகேன் நின்பால் அன்பாய் - -

மனமாய் அழல் சேர்ந்த