பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பட்டிமண்டபம்

மெழுகே அன்னார் மின்னார் பொன்னாள் கழல் கண்டு தொழுதே உன்னைத் தொடர்ந்தா

ரோடுந்த தொடராதே பழுதே பிறந்தேன் என்கொண்டு.

உன்னைப் பணிவதே என்று பாடும் போது அழத்தான் தெரியவில்லை, தொழவாவது தெரிந்திருக்கிறேனா என்று மனங் கசிந்து முறையிடுகிறாரே. ஆதலால், அழுகையையும், தொழுகை யையும் பிரித்து வைத்துப் பார்த்தால்தான் இந்த விவாதத்திற்கு இடம் உண்டு. இல்லையேல், இந்தப் பட்டிமன்றமே ஏற்பட்டிருக்க வேண்டியதில்லை.

இதுவரை அன்பர்கள் விவாதத்திலிருந்து பக்தி வளர்வதற்கு எளிதான வழி தொழுகையே என்று தெரிந்து கொண்டிருக்கிறோம். அத்தோடு நெஞ்சத்தில் கனிவு ஏற்படுவதற்கு உதவுவது அழுகையே என்பதையுமே அறிந்து கொண்டிருக்கிறோம்.

விவாதித்தவர்கள் எல்லாம் ஒன்றை மறந்து விட்டார்கள். பக்தி வளர்வதற்கு எளிதான வழி எது என்று பட்டிமன்றப் பொருள் அமையவில்லை, விவாதத்திற்குக் குறித்த பொருள், பக்திக் கனிவிற்குப் பாலமாக அமைவது தொழுகையாஅழுகையா என்பதே. ஆதலால், இன்னும் சிறிது சிந்தனையைச் செலுத்த வேண்டும்.

பக்தி என்ற ஒரு பெரிய ஆறு ஒடிக்கொண்டிருக்கிறது. அதன் இக்கரையில் நிற்கிறோம் நாமெல்லாம். பக்திக் கனிவு அக்கரையில் இருக்கிறது. அக்கணிவைப் பெற ஒரு பாலம் அமைத்தாக வேண்டும். அந்தப்பாலம் தொழுகை யாக இருக்கலாமா இல்லை, அழுகையாக இருக்கலாமா என்பதே கேள்வி. கனிவு ஏற்படுவதற்கு மிகவும் துணை