பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 143

புரிவது அழுகைதான் என்பதால், அதுவே பாலமாக அமையலாமே என்று எளிதில் முடிவு கட்டலாமோ என்று எண்ணுவோம். அழுகை நெஞ்சுக்கணிவைத்தருமே தவிர, பக்தி இருக்கும் இடத்திற்கு இட்டுச் செல்லக் கூடியதா என்ன? அந்தப் பக்தியையும் கணிவையும் ஏற்படுத்து வதற்கு மனிதனுக்கு உதவுவது பாடல்கள்தான்.

சூடுவேன் பூங்கொன்றை

சூடிச் சிவன் திறள்தோள் கூடுவேன், கூடி

முயங்கி, மயங்கி நின்று ஊடுவேன், செவ்வாய்க்கு

உருகுவேன், உள்உருகித் தேடுவேன், தேடிச்

சிவன் கழலே சிந்திப்பேன் வாடுவேன், பேர்த்தும்

மலர்வேன், அனல் ஏந்தி ஆடுவான் சேவடியே பாடுதுங்கான் அம்மானாய் என்று இறைவன் புகழைப் பாடிப்பாடி தொழுகின்ற முறையைப் பன்னிப் பன்னிக் கூறுகின்றாரே மணி வாசகர், இப்பாட்டில் அழுகைக்கே இடம் வைக்க வில்லையே? இன்னும் அகங்குழைவது, அன்புருகுவதை யெல்லாம் நினைத்துப் பாடிய மணிவாசகரும், பூமாலை புனைவதையும், புகழ்ந்து பாடுவதையும், திருக்கோயில் மெழுகுவதையும் கூத்தாடுவதையுமே செய்யாதவனாக வாழ்ந்து கெட்டு விட்டேனே என்றே கனிந்து கனிந்து பாடுகிறார்.

ஆமாறு உன் திருவடிக்கே

அகம் குழையேன், அன்புருகேன்

பூமாலை புனைந்து ஏத்தேன்

புகழ்ந்துரையேன் புத்தேளிர்