பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பட்டிமண்டபம்

கோமானின் திருக்கோயில்

துகேன், மெழுகேன் கூத்தாடேன் சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வேனே என்று தானே பாடுகிறார். இன்னும் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லி, விவாதத்திற்குத் தீர்ப்பு கூறுகிறேன்.

"நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து

நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்துநிறைந்து ஊற்றெழும் கண்ணிரதனால் உடம்பு நனைந்து நனைந்து" என்று இராமலிங்க அடிகள் பாடவில்லையா என்று கேட்கிறார், விவாதத்தில் கலந்து கொண்ட அம்மையார் ஒருவர். அப்படிக் கண்ணிரால் நனைந்து பாடியவரும் கூட, அதே பாட்டிலேயே, -

"அருள் அமுதே, நன்னிதியே

ஞான நடத்தரசே என்னுரிமை நாயகனே

என்று வனைந்து வனைந்து ஏத்துதும் நாம்?" என்று தானே முடிக்கிறார். இன்னும் இறைவழி பாட்டைமுறைப்படுத்தியவர்கள், சிரவணம், கீர்த்தனம், அர்ச்சனம், பாத சேவனம், ஆத்ம நிவேதனம் என்றே கூறியிருக்கிறார்கள். இவற்றில் ஆத்ம நிவேதனமே அழுகையால் பெறப்படுவது. மற்ற சிரவணம், கீர்த்தனம், அர்ச்சனம், பாத சேவனம் எல்லாம் தொழுகையின் பால் படும். பாடுவது எல்லாம் தொழுகையைச் சேர்ந்ததுதான் என்பதை, 'சூடுவேன் பூங்கொன்றை' என்ற பாட்டி லேயே பார்த்தோமே. ஆதலால், பக்திக் கனிவிற்குப் பாலமாக அமைவது தொழுகையே என்று முடிவு கூறி அமைதி பெறுகிறேன். -