பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பட்டிமண்டபம்

இப்பட்டி மன்றத்தில் பங்கு கொள்ளுதல் கூடும். இன்று இப்பட்டி மன்றத்தில் விவாதிக்க வந்திருக்கும் அன்பர். களும், இப் பட்டிமன்றத்தில் நடக்கும் பேச்சை எல்லாம் கேட்க வந்து குழுமி இருக்கும் அன்பர்களும் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று திடமாக நம்புகின்றவர்கள். இந்த அடிப்படைச் சித்தாந்தத்தை ஒப்புக் கொண்ட பின்னரே விவாதம் நடந்திருக்கிறது. .

இந்த இறைவன் தான் நம்மையெல்லாம் படைக் கிறான், காக்கிறான், அழிக்கிறான். அத்தனையையும் எல்லையில்லாத ஒரு விளையாட்டாக அநாதி கால மாகவே அவன் செய்து வருகிறான் என்று நாமெல் லோரும் நம்புகிறோம். அத்தகைய பரம்பொருளுக்கே கவிச்சக்கரவர்த்தி கம்பனும் தனது அமர காவியமாகிய இராமர்வதாரத்தில் முதற்கண் வணக்கம் செலுத்துகிறான். பாட்டுத்தான் தெரியுமே: -

உலகம் யாவையும்

தாமுள ஆக்கலும் நிலை பெறுத்தலும்

நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டு உடையார், அவர் தலைவர், அன்னவர்க்கே

சரண் நாங்களே. என்ற காப்புச் செய்யுள்தான் தமிழ்மக்கள் நாவில் பல காலும் நின்று பயிலப்பட்ட ஒன்றாயிற்றே! இப்படிப் பட்ட இறைவனிடம் நன்றியோடு அன்பு செலுத்துதல், வணங்குதல், அவனை வழிபடல், பாடல்கள் மூலமும், ஆடல்கள் மூலமும் அவன் புகழைப்பாடிப் பரவுதல்