பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 147

எல்லாம் நாம் செய்ய வேண்டிய முக்கியமான கடமை என்பதையும் உணர்ந்திருக்கிறோம். இப்படியெல்லாம் வழிபாடு செய்தலையே பக்தி செலுத்துதல் என்றும் நம்பி வந்திருக்கிறோம். இப்படி பக்தி செலுத்துவதன் மூலம் இறைவன் திருவடி அடையலாம் என்பதையும் நமது முன்னோர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தலையே நீ வனங்காய், வாயே வாழ்த்து கண்டாய், நெஞ்சே நீ நினையாய் ' என்றெல்லாம் நாவுக்கரசர் பாடி, பக்தி செய்வதற்கும், வழிவகுத்துக் கொடுத்திருக்கிறார்.

இனி ஞானம் என்றால் என்ன என்று பார்க்கலாம். இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்பு கிறோம். அந்த இறைவனின்தன்மை என்ன என்று தெரிய வேண்டாமா? உண்மையில் காணாத ஒன்றை நம்ப மறுக்கின்ற நாத்திகர்களை விட, நம்புகின்ற ஒன்றைக் காண மறுக்கும் ஆஸ்திகர்களே இறைஞானத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள். இறைத் தன்மையை அவனா, அவளா, அதுவா என்று ஆராயலாம். இறைவனுக்கு உருவம் உண்டா, இல்லையா என்று சிந்திக்கலாம். அவன் உருவம் உடையவனா? அருவமாக நிற்பவனா? இல்லை, அருவுரு வமானவனா? என்றெல்லாம் ஆராய்ந்து தெளியலாம். ஆனால், இப்படியன், இந்நிறத்தான், இவ்வண்ணத்தான் இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட ஒணாதென அப்பரேகையை விரிக்கிறாரே! என்ன செய்வது?

அன்றும் திருவுருவம்

காணாதே ஆட்பட்டேன் இன்றும் திருவுருவம்

காண்கிலேன் - என்றுமே

எவ்வுருவோன் நும்பிரான்

என்பார்கட்கு என்னுரைக்கேன்

எவ்வுருவோ நின்னுருவம் எது?