பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் 13

தொடர்ந்து மாலையிலும் நடந்தன. பிறவி ஊமை ஒருவனுக்கு அந்த இடத்துக்கு வந்தபோது பேசும் சக்தி வந்ததால்தான் அதற்குப் பேச்சுப்பாறை' என்று பெயர் வந்ததாகவும், பின்னர் அதுவே பேச்சிப்பாறை'யாகத் திரிந்து விட்டதாகவும் ஒரு கதை உண்டு. அது எவ்வளவு தூரம் உண்மையோ தெரியாது. ஆனால் அன்றைய விவாதத்தில், என்றுமே மேடையேறி அறியாத பலரும் பங்கு கொண்டு வெகு அருமையாகப் பேசினார்கள். உடல் நலக் குறைவால் பலவீனமாக இருந்தபோதிலும், மாமா அவர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் தலைமை தாங்கி நடத்திக் கொடுத்தார்கள். வழக்கம் போலவே அன்றும் அவர்கள் தீர்ப்பு ரஸமாக அமைந்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவர்கள் நடுவராக இருந்த எந்தப் பட்டி மண்டபத்திலும் நான் வாதாடிய கட்சி வெற்றி பெற்றதில்லை! ஆனால், அன்று நான் வாதாடிய கோசலையின் கட்சியே வெற்றி பெற்றது. அதுவே அவர்கள் தலைமையில் நாங்கள் கலந்து கொள்ளும் கடைசிப் பட்டிமண்டபம் என்பது அப்போது தெரியாமல் போய் விட்டது!

இந்த விழா நடந்தது 14-3-65 ஞாயிற்றுக் கிழமையன்று. மறுநாளே மாமா திருநெல்வேலி திரும்பி விட்டார்கள். 20-3-65 சனிக்கிழமையன்று - சரியாக ஒரு வாரம் கூட ஆகவில்லை - மிதமிஞ்சிய ரத்த அழுத்தத்தால், சுய நினைவு இழந்த நிலையில் பாளையங்கோட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள், நினைவு திரும்ப ஒன்றிரண்டு தினங்களாகி விட்டன. டாக்டர் களுடன் சேர்ந்து குடும்பத்தினர் அனைவருமே எமனுடன் போராடிக் கொண்டிருந்தோம். நினைவு சற்று தடுமாறும் போதெல்லாம், 'மணி ஆறாகி விட்டது. கூட்டத்துக்கு