பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 பட்டிமண்டபம்

என்று காரக்கால் அம்மையாருடன் சேர்ந்து இறைவனிடமே அவன் வடிவத்தைக் காட்டச் சொல்லிக் கேட்கலாம். இன்னும் ஆதியும், அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதியை, பொங்கழல் உருவனாகக் காணலாமோ என்று ஐயுறலாம். அவனன்றி ஒரணுவும் அசையாது என்று நம்புகின்ற நாம், அந்த அணுவினுள் ஊனாக, உயிராக, உணர்வாக இருந்து ஆட்டுபவற்றை ஆடும் பெருமானாகவே வழிபட முடியுமா என்று எண்ணலாம். இன்னும் சந்திரசேகரன், திரிபுராந்தகன், மாதிருக்கும் பாதியன், பிrாடனன் என்றெல்லாம் பலவித வடிவங்களில் அழைத்துத் தொழுகிறோமே, அவைகள் எல்லாம் சரிதானா என்ற கேள்வியையே எழுப்பலாம். நானாவித உருவாய் நடனம் ஆடினும், இறைவனை கலை மூலம், கலை வளர்க்கும் கற்பனை மூலம் காணும் அறிவு பெறலாம். இப்படியெல்லாம் இறைத்தன்மையை ஆராய்ந்து அறிந்து, இறை ஞானம் பெறுவதன் மூலம் இறைவன் திருவடி சென்று சேர்தல் கூடும்.

இனி, கர்மம் என்றால் என்ன என்றும் பார்க்கலாம். மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலும், ஆம், உண்பதும், உறங்குவதும் எல்லாம் கர்மமே என்றனர். கர்மம் தவிர்க்க முடியாதது. செய்யும் தொழில் எல்லாம் கர்மமே என்றும் கூறினர். ஆனால், இன்றைய விவாதத்திற்கு இக்கருமங் களைப் பற்றிப் பேச்சில்லை. செய்யும் கருமவினை எல்லாம் இறைவனே செய்கிறான் என்று, செய்யும் செயலை எல்லாம் இறைவனுக்கே அர்ப்பணம் செய்யும் கர்மத்தையே எடுத்துக் கொள்வோம். எல்லாம் கிருஷ் ணார்ப்பணம் என்றுதானே, பெரியோர்கள் கருமங்களைச் செய்யும் போது எண்ணுகின்றனர். பயன் கருதாத