பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 149

கர்மத்தைச் செய் என்று தானே கீதாச்சாரத்தில் கண்ணன் அருளியிருக்கிறான்.

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை

போகமும் திருவும் புணர்ப்பானை

பின்னையென் பிழையைப் பொறுப்பானை

பிழையெல்லாம் தவிரப் பணிப்பானை

என்றுதானே சுந்தரரும் பாடுகிறார்? இப்படி கருமம் செய்வதன் மூலம் நான் என்னும் அகந்தை அகல்கிறது, அது காரணமாக இறைவன் திருவடி சென்று சேர முடி கிறது - என்பது கர்மத்தின் கட்சியில் நின்று விவாதிப்ப வர்களது வாதம். . .

இவ்வளவு நேரம் பட்டி மன்றத்தில் விவாதித்தவர் களது வாதத்தில் இருந்து பக்தி, ஞானம், கர்மம் எல்லாமே இறைவன் திருவடியில் நம்மைச் சேர்க்கும் சக்தி வாய்ந்தவை என்பதை அறிகிறோம். ஆனால், இதையே முடிவாகக் கொள்ளுதல் இயலாதுதான். இந்த விவாதத் தில் தீர்ப்புக் கூற, நாம் அந்தக் கண்ணன் அருளிய பகவத் கீதையினையே நாட வேண்டும். கீதையில் மூன்றாவது அத்தியாயத்தில் கிருஷ்ண பகவான் அர்ச்சுனனிடம், 'பற்றில்லாமல் தொழில் செய்து கொண்டிருக்கும் மனிதன் பரம்பொருளை எய்துகிறான் என்று கூறுகிறார். ஆதலால் கீதை கர்மத்தை வலியுறுத்துகிறது, என்று stašrgyösissilh The Gita therefore a mandate for action என்றே முடிவும் செய்வோம். -

இனி, ஞானமும், பக்தியும் நம்மை இறைவனின் திருவடி கொண்டு சேர்க்குமா, அதில் எளிதான செயல் எது என்று பார்க்கலாம். ஞானத்தின் மூலம் இறைவனை அடைதல் கூடும். அவனை நெருங்குதலும் கூடும். ஞானம்