பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 பட்டிமண்டபம்

இறைவன் தன்மைகளை நன்றாக விவரிக்க உதவும். அப்படி விவரிப்பதன் பலன் என்ன என்றுதான் கவிச் சக்கரவர்த்தி கம்பரே சொல்கிறாரே,

ஒன்றே என்னின் ஒன்றே ஆம்

பல என்று உரைக்கின் பலவே ஆம் அன்றே என்னின் அன்றே ஆம்

ஆம் என்று உரைக்கின் ஆமே ஆம் இன்றே என்னின் இன்றே ஆம்

உளதென்றுரைக்கின் உளதே ஆம் நன்றே நம்பி குடிவாழ்க்கை

நமக்கு இங்கு ஏனோ பிழைப்பு அம்மா!

ஆம். எப்படிக் கருதினாலும், அப்படியெல்லாம் கருத இடங்கொடுப்பவனாக அல்லவா இறைவன் இலங்கு கின்றான். இப்படித்தான், விவரிக்க விவரிக்க நம் கைக்குள் அடங்காத கள்ளனாக அவன் நம்மிடமிருந்து நழுவி விடுகிறான். இன்னும், பக்திக்கு, ஞானம் சாதனம் என்பர். ஆனால், பக்திக்கு இடையூறே ஞான முயற்சி என்பதும் நாம் அறிந்ததே. இப்படியெல்லாம் ஞானம் விவரிக்க உதவுகிறதே தவிர, அவன் திருவடியில் கொண்டு சேர்க்க உதவுவதாக இல்லை. அப்படியிருக்க, அதை எளிய நெறி என்று எப்படிக்கூற இயலும்? ஆகவே, ஞானமும் இறைவன் திருவடி அடைய எளிய நெறியாக அமையாது என்று கூறிவிடலாம். -

எஞ்சியிருப்பது பக்திதானே? பக்தியைப் பற்றிப் பேசும் மணிவாசகர், முத்தி நெறி அறியாத மூர்க்கரொடு முயல்வோர்க்குப் பக்தி நெறி அறிவித்து, பழவினைகளை ஒட்டி, சித்தமலம் அறிவித்து சிவமாக்கி ஆட்கொண்டான் திருப்பெருந்துறை உறை இறைவன் என்றே சொல்கிறார்.