பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 151

ஆதியும், அந்தமும் இல்லாத அரும்பெரும் சோதி என்று பாட ஆரம்பித்து பத்தொன்பது பாட்டுக்கள் பாடிய பின் தானே, திருவெம்பாவை இருபதாவது பாட்டில் ஆதியாம் பாதமலர், அந்தமாம் செந்தளிர்கள் என்று பாடத் தெரிந்திருக்கிறது. அப்போதுதானே ஆதியாயும் அந்தமாயும் இருப்பவை அவன் திருவடிகளே என்ற உணர்வும் பிறந்திருக்கிறது. அப்பரைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். - -

பெருகலாம் தவம் பேதமை தீரலாம்

திருகலாகிய சிந்தை திருத்தலாம் பருகலாம் பரமாய தோர் ஆனந்தம்

மருகலானடி வாழ்த்தி வணங்கவே

என்றல்லவா பாடுகிறார். புறமதமாம் சமண மதத்தில் அமர்ந்திருந்த அவர் பக்தி பணணி, பக்தி பண்ணி இறைவன் திருவடி நிழலை அடைந்து, அதில் அவர் பெற்ற இன்பத்தையும்,

மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிளவேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நிழலே

என்று மிகவும் எளிதாகக் கூறிவிடுகிறாரே. இப்படி பக்திப் பனுவல்களைப் பாடிப் பாடிப் பரவசமாகி பக்தி செய்வதே இறைவன் திருவடி கொண்டு சேர்க்கும், மிகவும் எளிதான வழி என்று தெரிந்து கொள்கிறோம். இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க கண்ணனது கீதை உதவாதோ என்று நீங்கள் கேட்பீர்கள். கீதையின் மூன்றாவது அத்தியாயத்தில் கர்மத்தையும், ஒன்பதாவது அத்தியாயத்தில் ஞானத்தையும் பற்றிப் பேசிய கண்ணன்