பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 பட்டிமண்டபம்

மேலும் மேலும் உபதேசித்து பன்னிரெண்டாவது அத்தியாயத்தில் பக்தியைப் பற்றியும் கூறுகின்றான்.

வேதங்களாலும், தவத்தாலும் தானத்தாலும், வேள்வியாலும் என்னைக் காணுதல் இயலாது பிறரிடம் செல்லாத பக்தியால் மாத்திரமே என்னை இவ்விதமாக அறிதலும், உள்ளபடி காணுதலும் என்னுட் புகுதலும் இயலும்என்றே கூறி முத்தாய்ப்பு வைக்கிறான்.

பக்தி நெறி இறைவன் திருவடியில் நம்மைக் கொண்டு சேர்ப்பதற்கு மட்டுமல்லாமல், அவனோடு இரண்டறக் கலப்பதற்குமே துணைபுரியும் சாதனமாக அமைந்து விடுகிறது. ஆகவே, எளிதான நெறியாகவும், விளங்கு &pg/. Bakthi leads to grace and wisdom assisp.gif&s அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதை நன்கு புரிந்து கொண்டு விட்டால் நாமும் அப்பருடன் சேர்ந்து.

நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்

நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம்.அல்லோம்

இன்பமே எந்நாளும் துன்பமில்லை தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மையான

சங்கரன் நற்சங்கவெண் குழையோர் காதில் கோமாற்கே நாம் என்றும் ஆளாய்க்

கொய்மலர் சேவடியினையே குறுகினோமே. என்று ஆடலாம், பாடலாம், ஆடிப்பாடி பக்தியும் பண்ணலாம். முடிவில் ஆண்டவன்திருவடியை அடைந்து அமைதியும் பெற்று மகிழலாம்.