பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 பட்டிமண்டபம்

நேரமாகி விட்டது. எல்லோரும் காத்துக் கொண்டி ருப்பார்கள்' - என்றே அங்கலாய்த்துக் கொண்டி ருந்தார்கள். நினைவெல்லாம் கூட்டம், பேச்சு, சபையோர் - இப்படியே சுற்றிச்சுழன்று கொண்டிருந்தது. மக்களைப் பற்றியோ, மனைவியைப் பற்றியோ, சொத்து சுகத்தைப் பற்றியோ அவர்களுக்குச்சிந்தனையே இல்லை. ஒரு நாள் இரவு அவர்களது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாகி விட்டது. நினைவு தப்பிய நிலையில், நல்ல பட்டிமண்டபத் தீர்ப்பொன்றையே வழங்கிவிட்டார்கள். 'படுக்கையிலிருந்தபடியே காவிய நாயகனான ராமனுடைய பண்புகளில் கவிச்சக்கரவர்த்தி கம்பனைக் கவர்ந்தது அவனது அறிவா, ஆற்றலா, அழகா என்பதைப் பற்றிய தீர்ப்பு. பேச்சில் ஒரு குழறலோ, தெளி வின்மையோ இருக்க வேண்டுமே... ம்... ஒன்று கூடக் கிடையாது! இரண்டொரு பாடல்களையுமே மேற்கோள் காட்டினார்கள். மிகத் தெளிவாக, அழுத்தமாக, அனு பவித்து வார்த்தைகளைச் சொன்னார்கள். பலமுறை சொல்லிச் சொல்லித் தழும்பேறிய நாவல்லவா?

செந்தாமரைக் கண்ணொடும்

செங்கனி வாயினொடும் சந்தார்தடந்தோளொடும்

தாழ் தடக்கைகளோடும் அம்தார் அகலத்தோடும்

அஞ்சனக் குன்றம் என்ன வந்தான் இவன் ஆகும்

அவ்வல்லில் இராமன் என்ற பாடலை, அடிபிறழாமல் சொல்லிராமனுடைய அறிவைக் காட்டிலும் ஆற்றலைக் காட்டிலும், அழகே கவிச்சக்கரவர்த்தியை வெகுவாகக் கவர்ந்தது. என்று கூறி