பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

1. இலக்கியத்திற்கு ஆக்கம் தருவது

காதலா? வீரமா?

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் பெரு மன்றத்தில் ஒரு சொல்லரங்கம். அந்தச்சொல்லரங்கத்தில் எழுத்தாளர் பெருமக்கள் விவாதிக்க எடுத்துக்கொண்ட பொருள் இலக்கியத்திற்கு ஆக்கம் தருவது காதலா? வீரமா? என்பது. இதனால், இலக்கியங்களில் எல்லாம் இந்த இரண்டு ரஸங்களே உண்டு என்று முடிவுகட்டி விடக் கூடாதுதான். சாதாரணமாக நமது உணவு வகையிலே அறுசுவை ஷட்ரஸம் உண்டே இலக்கியத்தில், அதுவும் மகா காவியங்களில் ஒன்பது ரஸங்கள் உண்டென்றும், வடமொழி இலக்கிய கர்த்தர்களும் தமிழ் இலக்கிய கர்த்தர்களும் கூறுகின்றனர். பார்க்கப்போனால் ஒன்பது ரஸ்ந்தானா? ஒன்பதினாயிரம் ரஸ்ம் என்றல்லவா தோன்றுகிறது! அப்படி இருக்க, இரண்டே இரண்டு சுவைகளை மட்டும் எடுப்பானேன்? எத்தனை ரஸங்கள் இருந்தாலும் அவற்றில் தலையாய ரஸ்ங்கள் இரண்டே அவைதாம் காதலும், வீரமும். அதிலும் தமிழில் இந்த இரண்டு ரஸங்களையும் அடிப்படையாகக்கொண்டுதான்