பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பட்டிமண்டபம்

இலக்கியங்கள் வளர்ந்திருக்கின்றன. நமக்குத்தான் தெரியுமே, சங்க இலக்கியங்கள் எல்லாம் அகம், புறம் என்ற இரண்டு பாகுபாடுகளினுள்ளே அடங்கும் என்று. தமிழருக்குத் தெரிந்ததெல்லாம், வீட்டில் இருந்தால் காதல் பண்ணவும், வீட்டிற்கு வெளியில் வந்தால் போர்புரியவுந்தான். அதனால்தான் அகத்திணைப் பாடல்கள் எல்லாம் காதல் கவிதைகளாகவும், புறத் திணைப்பாடல்கள் எல்லாம் வீரம் செறிந்தவைகளாகவும் இருக்கக் காண்கிறோம். இராமாயணமும், பாரதமும் வீரகாவியங்கள்தாம். அவைகளில் இடையிடையே காதல் விரவி நிற்கக் காண்கிறோம். போர்க்களத்துப் பரணி பாட முனைந்த கவிஞர்களும் காதல் கவிதை பாட மறக்கவில்லை. கலிங்கத்துப் பரணி தெரியாதா நமக்கு? இல்லை, நந்திக்கலம்பகம் என்றாலும் அங்கும் வீரமும், காதலும் விரவிக் கிடக்கத்தானேகாண்கிறோம்? மிக மிகப் பழமையான இலக்கியம் என்று கருதப்படும் முத் தொள்ளாயிரத்திலும் வீரமும், காதலம் சேர்ந்து தானே பரிமளிக்கின்றன? இந்த நிலையில்தான் இலக்கியத்திற்கு ஆக்கம் தருவது காதலா, வீரமா என்று விவாதிக்க முனைந்திருக்கின்றனர் நமது எழுத்தாளர்கள்.

விவாதத்தில் கலந்து கொள்ளும் பத்து எழுத் தாளர்களும் நல்ல நல்ல இலக்கியம் படைக்கிறவர்கள். பல இலக்கியங்களைக் கற்றுத் தெரிந்தவ்ர்களும் கூட. ஆதலால் இவ் விவாதத்தில் கலந்து விவாதித்து நமக் கெல்லாம் ஒரு தெளிவை ஏற்படுத்த வல்லவர்கள். என்றாலும் கட்சி என்று ஏற்பட்டு விட்டால் தங்கள்தங்கள் கட்சிக்குரிய சான்றுகளைத் தேடுவதிலும், மற்றை கட்சியின் வாதங்களை முறியடிப்பதிலுமே கவனம்