பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 21.

செலுத்துகின்றனர். எல்லோரும் மிக்க திறமையோடு விவாதித்தனர் என்பதை நான் சொல்லி, அவையோர் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

இனி இவர்கள் வாதத்தில் சொல்லியவற்றைக் கொஞ்சம் தொகுத்துப் பார்க்கலாம். காதல் கட்சியில் - இலக்கியத்திற்கு ஆக்கம் தருவது காதலே என்று விவாதித்தார்கள். -

காதல் என்பது கவர்ச்சியிலே பிறப்பது. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படுவதாயிருக்கலாம். மானிடருக்கு அவர்கள் பிறந்த பொன்னாட்டின் மேல் பிறந்ததாக இருக்கலாம். இல்லை, தன்னைப் படைத்த கடவுள் பேரிலேயே திரும்பலாம். பிரேமையே காதலுக்கு அடிப்படை. அது உயிரினங்கள் எல்லாவற்றிற்குமே பொதுவான நியதி. காதல் இல்லாவிட்டால் வாழ்வு இல்லை, இன்பம் இல்லை. ஏன் கவிதை இல்லை. காவியம் இல்லை, கலையுமே உருவாவதில்லை. காளிதாஸனது 'சாகுந்தலம் ஒரு காதல் நாடகம். சிருங்காரச் சுவை மிகுந்தது. வடமொழிக் காவியம், நாடகம் முதலிய இலக்கியங்களுக்கெல்லாம் அடிப்படை காதலே. ஏன் வடமொழி இலக்கியம் என்று மட்டும் குறிப்பிடுவானேன்? ஆங்கில இலக்கியம் அத்தனையும் காதல் வாழ்வைச் சொல்வது தானே? ரோமியோ ஜூலி யட், அந்தோணி கிளியபாட்ரா முதலிய ஷேக்ஸ்பியர் நாடகங்கள் எல்லாம் காதல் இலக்கியங்கள்தாமே. பாரசீகத்து அமர இலக்கியங்களான லைலாமஜ்னு, அனார்க்கலி முதலிய கதைகளும் காதலைத்தானே கூறுகின்றன. அவ்வளவு தூரம் எல்லாம் போவானேன்? தமிழில் எழுந்த ஐம்பெருங்காப்பியங்களில் சிறந்ததான