பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பட்டிமண்டபம்

சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி மணம் முடித்து மனையறம் புகுந்ததும் அவர்கள் உள்ளத்தில் நிறைந் திருந்த காதலைத்தான் எப்படியெல்லாம் சொல் கிறார் இளங்கோவடிகள்

மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே தேனே அரும் பெறல் பாவாய்! ஆருயிர் மருந்தே!

பெருங்குடி வணிகன் பெரு மட மகளே! மலையிடைப் பிறவா மணியே என்கோ?

அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ? யாழிடைப் பிறவா இசையே என்கோ?

தாழிருங் கூந்தல் தையால் நின்னை

என்று கோவலன், கண்ணகியின் நலம் புனைந் துரைக்கும் போது, காதல் கவிதை அல்லவா பாடுகிறான்? கம்பனது காவியமான இராமாயணத்திற்கு ஆக்கம் தருவதே ராமன் சீதை காதல் தானே? மிதிலை நகரின் கன்னி மாடத்து மேடை மீது நிற்கும் சீதையை, தெரு வீதியிலே முனிவர் முன்செல்லத், தம்பி பின்வரக் கண்ட ராமன் பார்க்கிறான். சீதையும் பார்க்கிறாள். இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்துகின்றனர். . --

எண்ணரும் நலத்தினாள் இணைய நின்றுழி

கண்ணொடுகண் இணைகவ்வி ஒன்றையொன்று

உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்

என்பதிலே இருவரும் காதல் வயத்தராய் நின்ற காட்சியைத்தானே வர்ணிக்கிறான் கம்பன். இக்காதல்