பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 23

வளர்கிறது. பின்னர் தண்டகாரண்யத்திலே இராவணன் தன் காதலியாம் சீதையைக் கவர்ந்து செல்ல அந்த இராவணன் மீது படைகொடு சென்று அவனை வென்று சீதையை மீட்க வேண்டியிருக்கிறது. இராவணவதத்திற்கு ராமன் வீரம் துணை நின்றிருக்கிறது என்றால் அந்த வீரத்தை விளைவிக்க, சீதையின் காதல் அல்லவா ஆக்கம் தந்திருக்கிறது?

மேலும் காதல் பேசுகிறது என்றால், கடவுளே பேசுகின்றார் என்றுதான் பொருள். வானுலகமே காதல் கவிதையில் சொக்கி நின்று விடாதா என்ன? ஷேக்ஸ்பியர் என்ற கவிஞன் கூறுகிறானே- >

And when love speaks the voice of all the Gods Makes heaven drowsy with the harmony

என்று. இன்னும் ஒரு மேல் நாட்டு அறிஞன் சொல் கிறான் - வீரனைக் கண்டு அஞ்சித் தலைவணங்கலாம். அறிவாளியைக் கண்டு மரியாதை செலுத்தலாம். ஆனால் காதலன் ஒருவனே அன்பை வளர்க்கிறான் என்று,

The conqueror is regarded with awe The wiseman commands our respect It is only the lover that wins our affection

என்பதுதானே அவனுடைய சித்தாந்தம். இதனால் இருவரை ஒன்று சேர்ப்பது காதல். ஒருவரை ஒருவரிட மிருந்து பிரிப்பது வீரம். அன்பை வளர்ப்பது காதல். பகைமையை உருவாக்குவது வீரம். - - - -

Love is born of love.

Valour of envy and hatred.