பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பட்டிமண்டபம்

இந்த நிலையில் மக்களுக்கெல்லாம் இன்பத்தை வாரி வழங்கும் இலக்கியத்திற்கு வீரத்தால் ஆக்கம் தர முடியுமா? முடியாதே. காதல் தான் ஆக்கம் தருதல் கூடும். ஆதலால் இலக்கியத்திற்கு ஆக்கம் தருவது காதலே என்பது ஒரு கட்சியார் வாதம். -

வீரத்தின் கட்சியில் நின்று பேசியவர்களும் சளைக்க வில்லைதான். அவர்களும் பல சான்றுகளைக் காட்டி னார்கள். ராமர் சீதை காதல் ஆதி காவியமாகிய வால்மீகி இராமாயணத்தில் இல்லை. ஏதோ கொஞ்சம் சுவை யுடையதாக்கிக் கொள்ளத்தானே வீரகாவியமான இராமா யணத்திலே அதைச் சேர்த்திருக்கிறான் கம்பன். ராமனது வீரமும், இராவணனது வீரமும், போரிடாவிட்டால் இராமாயணமே ஏது? ராமனுடன் போரிட்டால் வெல்ல முடியாது தோற்றுப் போவாய் என்று இந்திரசித்து தன் தந்தையாம் இராவணனிடம் சொன்னபோது, -

வென்றிலன் என்ற போதும்

வேதம் உள்ளளவும் யானும் நின்றுளன்அன்றே அவ்

இராமன் பேர் நிற்குமாயின் பொன்றுதல் ஒரு காலத்தும்

தவிருமோ பொதுமைத்தன்றோ இன்றுளார் நாளை மாள்வார்

புகழுக்கு இறுதி உண்டோ என்றல்லவா. பேசுகிறான் இராவணன். போர்க் களத்திலே ராமன் ஏவிய கணையினால் உயிரிழந்து கிடக்கும் இராவணனைக் கவிச் சக்கரவர்த்தி கம்பன் எப்படிப் பாடுகிறான் என்றுதான் பாருங்களேன்.