பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் - 25

வெம்மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க

மனம் அடங்க வினையம் வீய தெம்மடங்க பொருதடங்கைச் செயல் அடங்க

மயல் அடங்க ஆற்றல் தேய தம்மடங்கு முனிவரையும் தலைஅடங்கா

நிலை அடங்கச் சாய்த்த நாளின் மும்மடங்கு பொலிந்தன அம்முறை துறந்தான்

உயிர்துறந்த முகங்கள் அம்மா! என்று தானே இராவணன் வீரம் பாராட்டப்படுகிறது. இன்னும் மெலியும் இடை, தடிக்கும் முலை, வேயிளந்தோள், சேயரிக் கண் வென்றி மாதர் நெடும் புலவியினும் வணங்காத மகுட நிறை வயங்குகின்றவன் ஆயிற்றே அவன். இம்மட்டோ, இரணியன் வெகுண் டெழுவதைச் சித்திரிக்கின்ற போதும்கூட,

கோரிது நீயும் காண கிளர்ந்த கோளரியன் -

தாளொடு தோளும் நீக்கி உன்னையும் துணித்து பின்னர் வாளினைத் தொழுவதெல்லாம் வணங்குதல் மகளிர் ஊடல்

நாளினும் உளதோ என்றான் - அண்டங்கள் நடுங்க நக்கான். என்றுதானே வீரத்தைப் பாராட்டுகிறான்? இத்தனை யும் இராம கதைக்கு ஆக்கம் தரவில்லையா என்ன? இன்னும், மகாபாரதம் முழுவதும் வீர காவியந்தானே? காவிய நாயகன் வீர புருஷனாக இல்லாவிட்டால் அந்த இலக்கியம் ஆக்கம் பெறுவது ஏது? வீரம் என்ற ஒரு உணர்ச்சியை உருவாக்காவிட்டால் இலக்கியம் ஆக்கமே பெறாது என்பது எதிர்க்கட்சியினர் வாதம்.

இந்த விவாதத்தில் தீர்ப்புக் கூறுவது எளிதான காரியம் அன்று. இலக்கியத்தின் வளத்துக்கு காதலும், வீரமும்