பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 பட்டிமண்டபம்

உரம் கொடுக்கின்றன, என்பதை மறுத்தல் இயலாது. உலக இலக்கியத்தையெல்லாம் சான்று காட்ட வேண்டிய தில்லை. தமிழ் எழுத்தாளர் பெருமன்றத்தில் நடக்கும் இந்த விவாதத்தில் தமிழ் இலக்கியங்களையே சான்றாக எடுத்துக் கொண்டால் போதும். பண்டைய சங்க இலக்கியங்களைக் கூர்ந்து நோக்கினால் தமிழர் வாழ்வில் காதல் எவ்வளவு இடம் பெற்றிருக்கிறதோ, அதற்குக் கொஞ்சமும் குறையாமல் வீரமும் இடம் பெற்றிருக்கிறது என்று காண்போம். ஆம், அகநானூறு முழுவதும் தமிழன் காதல் வாழ்வு பேசப்பட்டால், புறநானூறு முழுவதும் தமிழன் வீரம் பேசப்படுகிறது. வாழ்க்கையைப் பிரதி பலிப்பதுதான் இலக்கியம் என்றால் தமிழிலக்கியத்தில் காதலும், வீரமும் சம அளவிலேயே இடம் பெற்றி ருக்கின்றன எனலாம். இவை ஒவ்வொன்றும் தனித்து நின்று ஆக்கம் தந்ததாக இலக்கிய வரலாறு கூறவில்லை. ஆதலால், ஒரு நாணயத்தின் இருபுறம் போலவே இலக்கியத்திற்குக் காதலும், வீரமும், ஆக்கந்தந்திருக் கின்றன என்று கொள்ளலாம். இப்படிக் கூறுவதற்கு ஏன் ஒரு சொல்லரங்கம், ஏன் ஒரு பட்டிமன்றம் என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. விவாதத்தின் தலைப்பு எப்படி இருத்தல் வேண்டுமென்றால், இலக்கியத்திற்கு மிகுந்த ஆக்கம் தருவது எது? காதலா? வீரமா? என்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் இவ்விவாவத்திற்குத் தீர்ப்புக் கூற முடியும். அது கூட என் கல்வி அறிவின் துணைகொண்டோ, அல்லது ஆற்றலின் துணை கொண்டோ சொல்ல முடியும் என்று தோன்றவில்லை. எழுத்தாளர்களுக்கெல்லாம் நல்ல ஆதர்சமாக நிற்பவன் பாரதியாராயிற்றே? அவன் தானே இந்த எழுதுகோல் தெய்வம், எழுத்தும் தெய்வம் என்று எழுத்தாளர்களுக்கு