பக்கம்:பட்டி மண்டபம்-தீர்ப்புப் பேருரைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 27

வணக்கம் செலுத்தி இருக்கிறான். ஆதலால், அவனையே நாடுவேன் நான். சொல்கிறான் அவன்.

காதலிலே கருத்து ஒன்றிக் கலந்து விட்டால்

கணமான மன்னவர் போர் எண்ணுவாரோ? மாதருடன் மனம் ஒன்றி மயங்கி விட்டால்

மந்திரிமார் போர்த்தொழிலில் மனங்கொள்வாரோ? உண்மைதானே? நம் இந்திய நாட்டின் எல்லையில் தொல்லை தரும் சீனனுக்குக் காதல் உணர்விருந்தால், இந்த எல்லைப்போரில் இறங்கி இருப்பானா? யாரோடும் பகை கொள்ளலன் என்றபின் போர் ஒடுங்கும், புகழ் ஒடுங்காது என்றானே கம்பன். மேலும், 'யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கொள்கை காதலை வளர்க்குமே தவிர, வீரத்தை வளர்க்காதே. இப்படி மலர்ந்த வாழ்வை யுடைய தமிழ் மக்களது இலக்கியத்திற்கு மிகவும் ஆக்கம் தருவது எதுவாக இருத்தல் கூடும்? பாடுகிறானே பாரதி மேலும். -

காதலினால் மானுடர்க்கு கலவி உண்டாம்

கலவியினால் மானுடர்க்கு கவலை தீரும் காதலினால் மானுடர்க்கு கவிதை உண்டாம்

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே அஃதன்றோ இவ்வுலகத்தலைமை இன்பம்

காதலினால் சாகாமல் இருத்தல் கூடும் கவலைபோம் அதனாலே மரணம் பொய்யாம்

என்று. 'பாரதியாரே சரி காதலினால் கவிதை உண்டாம் அஃதன்றோ தலைமை இன்பம் என்று மட்டும் கூறியிருக்கின்றீரே இன்றைய பட்டிமன்றத்திற்கு எடுத்துக்கொண்ட வீரத்தைப் பற்றி ஒன்றுமே சொல்ல வில்லையே, ' என்று கேட்டேன் அவரிடம். அதற்கு